img/728x90.jpg
 வீரத்தின் அடையாளம் கேணல் சாள்ஸ்....!

வீரத்தின் அடையாளம் கேணல் சாள்ஸ்....!

வீரத்தின் அடையாளம் கேணல் சாள்ஸ்...!

"கருத்திலே தமிழ்கொண்டு களத்திடை பகைவென்ற புலிப்படை மாவீரன் கரும்புலியாய் வாழ்ந்து கரும்புலியால் வாழ்ந்து,கரும்புலிகளோடு வாழ்ந்து,கரும்புலிக்காக வாழ்ந்து,இருதிவரை கரும்புலிகளோடு கலந்திருந்த கரும்புலிகள் கண்ட தமிழீழ தேசத்தின் விடுதலைக் கனவை நினைவாக்க களம் பல அமைத்து வழிநடத்திய தமிழீழ விடுதலைப்புலிகளின் புலனாய்வு துறையின் துணை பொறுப்பாளர்,இணைபொறுப்பாளர் கேணல்.சாள்ஸ்".
 
ஒரு நாடு கட்டுக்கோப்பாடு இருக்க.நிழலாக நின்று அதையும் கடந்து அவர்களையும் வழிநடத்துபவர்களாக 'வேவு'படையாக மொத்தத்தில் அனைத்துமாக திகழ்வதே 'புலனாய்வு துறையினர்.'புலனாய்வுதுறையே' ஒரு நாட்டின் முதுகெலும்பு ஆகும்.'புலனாய்வுதுறையின்'அவசியம் எவ்வளவே ஆபத்தும் அதிகம்.மக்களோடு மக்களாய் கலந்து உறவாடும் ஒரு முகம் காரணம் தப்பினால் மரணம் என்ற நிலையில் கண்காணிப்பு வேலையில் இமையளவும் பிசகிவிட கூடாது என்பதில் கவணமும் மறுமுகமும் என உலாவுவது பயங்கரமானது.
 
இவர்களது போரியல் வாழ்வு 'புலனாய்வாளர்களும்,தற்கொடை போராளிகளே தற்கொடை போராளிகளும் புலனாய்வாளர்களே.தமிழீழ தேசத்தில் 'புலனாய்வு துறைக்கு' புதுப்பொலிவு ஊட்டியவர்கள் 'வேவு புலி'என்ற கரும்புலி மாவீரர்கள் எதிரியின் குகைக்குள் எமக்காய் சென்றவர்வர்கள் எத்தனை பேர்... கணப்பொழுதில் வெடியாய் வெடித்தவர்கள் எத்தனை பேர்..எதிரியின் கைகளில் அகப்பட்டு அடித்து கொல்லப்பட்டவர்கள் எத்தனை பேர்... நாம் நாடு விடிந்தாலும் நாம் மறப்போம அவர்களை அந்த சிற்பிகளை செதுக்கி செதுக்கி சிற்பங்கள் ஆக்கிய மாபெரும் சிற்பமே இந்த கேணல்.சாள்ஸ்.
 
அதிகம் அறியபடதவரும் அதிகம் அறியப்படவேண்டியவரும் அந்நியரால் அதிகமாய் அடையாளம் காணப்பட்டவன் உலகறிய செய்த விடுதலைப்புலிகளின் சாதனை தாக்குதல் பலவற்றை வழிநடத்திய சிறந்த வீரன்.05-01-2008 அன்று தமிழீழத்தையே துயர்த்தில் ஆழ்த்தி எல்லோரது இதயங்களையும் சில கணங்கள் கலங்க வைத்த.......அந்தச் செய்தி
 
"கேணல் சாள்ஸ் அவர்கள் வீரச்சாவாம்" எப்படி..? என்ன நடந்தது..? இனம் புரியாத ஏக்கம் இதயத்தை வாட்ட துயரம் தொண்டையை அடைக்க நம்பமுடியாத அந்த செய்தியுடன் 2005 ம் ஆண்டு சித்திரை மாதம் படையப்புலனாய்வுப்பிரிவை பொறுப்போற்ற சாள்ஸ் அவர்கள் அப்பிரிவைத் தாக்குதல் ரீதியாகவும்,புலனாய்வு ரீதியாகவும்,நிர்வாகரீதியாகவும் மிகவும் நேர்த்தியாக கட்டிவளர்த்தார்.
 
தனது நீண்டகால புலனாய்வு அனுபவங்களை ஒவ்வொரு போராளிக்களுக்கும் தெளிவாக புரியவைத்து சிறந்த போராளிகளாக வளத்தெடுத்தார்.ஒரு புலனாய்வுப் பிரிவுக்குள் என்னென்ன கட்டமைப்பு இருக்குமோ அத்தனை கட்டமைப்புகளையும் உருவாக்கி அனைத்துப் பணிகளையும் தானே நேரில் வழிநடத்தி நெறிப்படுத்தினார்.தன்னுடைய அனைத்து அனுபவங்களையும் சம்பவங்கள் ஆக்கி அனைவருக்கும் எளிதாகப் புரியவைத்து கடமைகளை இலகுவாக்கிய வீரன் சாள்ஸ்.மிகக் குறுகிய காலப்பகுதியில் தேசியத்தலைவரின் நெறிப்படுத்தலின் கீழ் சரியான வழியில் படையப்புலனாய்வு பிரிவை கட்டியமைத்த சாள்ஸ் 01-01-2008 அன்று தன் வழிநடத்தலின் கீழ் பணிபுரியும் அனைத்துப் போராளிகளையும் ஒன்று கூட்டி "இந்த ஆண்டை எமது பிரிவின் நடவடிக்கை ஆண்டாக நான் பிரகடணப்படுத்துகிறேன்.இந்த இடைப்பட்ட காலப்பகுதியில் உங்களுக்கு எல்லா வழிகளிலும் சரியான முறையில் பயிற்சி அளித்துள்ளேன்.
 
இந்த வருடத்தில் இருந்து நாம் நடவடிக்கைகளை தீவிரப்படுத்த வேண்டும் தேசியத்தலைவர் எம்மிடம் நிறைய எதிர்பார்க்கின்றார்.அண்ணை எங்களிடத்தில் எதிர்பார்ப்பதை நாங்கள் அனைவரும் ஒன்றிணைந்து செய்ய வேண்டும்"...எனக் கூறி அனைவரும் செய்ய வேண்டிய பணிகளை தெளிவு படுத்தினார்.அனைத்து அணித்தலைவர்களுக்கும் வேலைத் திட்டங்களை பகிர்ந்தளித்தார்.
 
திட்டமிட்ட செயற்பாட்டைத் தீவிரப்படுத்த கேணல் சாள்ஸ் 04-01-2008 அன்று மன்னாருக்குச் சென்றார்.அங்கிருந்து கொண்டு செய்ய வேண்டிய சில இரகசியப் வேலை திட்டங்களை நெறிப்படுத்தி விட்டு.மன்னார் முன்னணிக்காவலரிணில்.லெப்.கேணல் மங்களேஸ் உடன் நின்ற படையப்புலனாய்வு போராளிகள் அனைவருடனும் உரையாடிவிட்டு.அன்று இரவு அவர்களிடத்திலேயே தங்கி,அவர்களின் செய்ய வேண்டிய பணிகளை நேரில் பார்த்து ஒழுங்கமைத்து விட்டு.05-01-2008 அன்று அதிகாலை வேளை ஒரு பணிக்காக மூண்று போராளிகளுடன் முகாம் நோக்கி புறப்பட்டுக் கொண்டிருந்த வேளை மன்னார் மாவட்டம் "பள்ளமடுப்பகுதியில்" சிறிலங்காப்படைகளின் ஆழ ஊடுருவும் படைப்பிரிவு நடாத்திய கிளைமோர்த் தாக்குதலில்
கேணல் சாள்ஸ் அண்ணா உட்பட
லெப்.வீரமாறன்
லெப்.காவலன்
லெப்.சுகந்தன்
ஆகியோர் வீரச்சாவடைந்தனர்.புலனாய்வுத்துறையின் முதுகெலும்பாக திகழ்ந்து பல வெற்றிகளின் வேராகவும் செயற்பட்ட கேணல் சாள்ஸ் அவர்களைப் பற்றி தெரியாதவர்கள் பலர் இருந்தாலும்.அந்த சாதனை வீரனைப்பற்றி அறியாதவர்கள் யாருமே இருக்க முடியாது.
 
சிங்கள இனவெறியர்களை கிலிகொள்ளச் செய்து.உலகத்தையே வியக்க வைத்து.உச்சகட்ட சாதனைகள் புரிந்து தேசியத்தலைவர் மனதிலும்,மக்களிடத்திலும்,போராளிகளிடத்திலும் தனி இடத்தை பிடித்த ஓர் அற்புத தளபதி தான் கேணல் சாள்ஸ்.இவரின் சாதனைகளையும்,வீரத்தையும்,தியாகத்தையும் அறிந்தவர்களால் நிச்சியமாக இவரை ஒரு சாதரண வீரனாகப் பார்க்க முடியாது.இவரின் செயல்கள் ஒவ்வொன்றும் வியப்பையே அளிக்கும்.கடமை நேரத்தில் மிக மிக கண்டிப்புடன் காணப்படும் கேணல் சாள்ஸ் மற்றைய நேரங்களில் புதிதாக இணைந்த போராளிகளுடன் கூட.தோளுடன் கைபோட்டு சக தோழன் போல் ஒவ்வொருவர் உணர்வுகளையும் புரிந்து கொண்டு அவர்களை ஊக்கிவித்து உற்சாகமாக வைத்திருப்பார்.
 
பயிற்சி நேரத்தில் போராளிகளோடு தானும் ஒருவனாக பயிற்சியில் ஈடுபட்டுக் கொண்டு பயிற்சி அளிப்பதில் இவருக்கு நிகர் இவரே.ஒரு தடவை அணித்தலைவர்களுடன் கடமை தொடர்பாக கேணல் சாள்ஸ் கதைத்ததுக் கொண்டிருந்த போது ஒரு பெண் போராளி அவர் கருத்தை எதிர்த்து வாதிட்டுக் கொண்டிருந்தாள்.அப்போது,தான் சாள்ஸ் அண்ணாவுடன் வாதிட்டுக் கொண்டிருக்கின்ற எண்ணம் மனதில் தோன்றவே மனம் திறந்து மன்னிப்புக் கோரினாள்.அவளை இடைமறித்த சாள்ஸ் அண்ணா அவர்கள் மனசுக்கு சரி என்று பட்டதை முகத்துக்கு நேரில் சொல்வது தப்பில்லை.உங்கள் துணிச்சலை பாராட்டுறன்.பிரச்சனைகளை உங்களுக்குள்ளே கதைக்காமல் எங்களுடன் நேராக கதைக்கும் போராளிகளைத் தான் எனக்கு மிகவும் பிடிக்கும் என்றார்.இந்த சம்பவமே இவருடைய பெருந்தன்மையை எமக்கு எடுத்துக் காட்டுகின்றது.
 
சிறுவயதில் போராட்டத்தில் இணைந்து புலனாய்வுப்பிரிவிலேயே நீண்ட காலம் பணிபுரிந்த வீரன் சாள்ஸ்.பிரதான புலனாய்வு,கரும்புலித்தாக்குதல்களை வழிநடத்திய பெரும் சாதனையாளனாகவே வாழ்ந்தார்.வெளியில் சொல்ல முடியாத,இதுவரை சொல்லப்படாத பல தாக்குதல்களை முன்நின்று வழிநடத்தி.சிறீலாங்கா அரசையே திணறவைத்த,உலகத்தையே உற்று நோக்க வைத்த "கட்டு நாயக்கா"வெற்றி தாக்குதலையும் சாள்ஸ் அண்ணா அவர்களே வழிநடத்தி நெறிப்படுத்தினார்.இன்னும் எத்தனை எத்தனையோ சாதனைகளை புரிந்து நீண்ட கால தாக்குதல் புலனாய்வாளனாக செயற்பட்ட இவரது செயற்பாடுகள் ஒவ்வொன்றும் மிகவும் இரகசியமானதாகவே இருந்தது( ஒரு புலனாய்வாளனுக்கு இருக்க வேண்டிய முக்கிய தகுதி அவன் யார் என்று இறுதி வரை யாருக்குமே தெரியக் கூடாது)அந்தத் தகுதியை தனதாக்கிய பெருந் தளபதி கேணல் சாள்ஸ் மட்டுமே.ஏனெனில் கேணல் சாள்ஸ் அண்ணா வீரச்சாவைத் தழுவிய இரண்டு மணிநேரத்துக்குள் சிங்கள ஊடங்களில் செய்தி வருகிறது சாள்ஸ் அவர்கள் செய்த தாக்குதல் நடவடிக்கைகள் அனைத்தையும் வரிசைப்படுத்தி வேறு ஒருவரின் புகைப்படத்தைப் போட்டு.
 
இச்சம்பவம் ஒன்றே சாள்ஸ் சிறந்த தாக்குதல் புலனாய்வாளன் என்று எடுத்துக் காட்டுகின்றது.எந்த நேரத்திலும் எந்த சூழ்நிலையிலும் எந்தக் கடமை என்றாலும் செய்யக்கூடிய மனவலிமை இவரிடம் இருந்தது.ஒரு கரும்புலித்தாக்குதலுக்கு திட்டமிட்டு தயார்படுத்தி அனுப்பிய ஒரு போராளி இலக்கை அண்மித்த இறுதி நேரத்தில் அப்பணியைச் செய்ய தயங்கிய போது சாள்ஸ் அவர்கள் தானே அந்த தாக்குதலை செய்ய வெடிமருந்து நிரப்பட்ட வாகனத்தில் ஏறி வாகனத்தை இயக்கிக்கொண்டிருந்த வேளை அவருடன் கூட நின்ற இன்னொரு போராளி "நீங்கள் இந்த இலக்குக்கு போக கூடாது,நீங்கள் நிறைய தாக்குதல்களை வழிநடத்த வேண்டும்"என்று கூறி வாகனத்தில் இருந்த சாள்ஸ் அவர்களை கீழே தள்ளிவிட்டு தானே அந்த இலக்கை தகர்த்தான்.
 
தென் இலங்கையில் மக்களோடு மக்களாக சாள்ஸ் அவர்கள் வாழ்ந்த காலங்களே அதிகம்.புலனாய்வு,கரும்புலி வீரர்களை உருவாக்கி எம் நாட்டுக்கு வந்த பல இன்னல்களைப் போக்கிய தலைசிறந்த வீரன் சாள்ஸ்.கரும்புலி வீரர்களை உயிருக்கு உயிராக நேசித்த சாள்ஸ் அண்ணா அவர்கள் வீரச்சாவடைந்த கரும்புலி வீரர்களின் பெயர்களையே தன் "மூன்று குழந்தைகளுக்கும் சூட்டி"அவர்களின் நினைவுகளுடனே குழந்தைகளையும் வளர்த்தார்.
 
தமிழ் மண்ணையும் மக்களையும்,தலைவரையும்,போராளிகளையும் நேசித்தது போலவே தனது குடும்ப உறவுகள் மீதும் அதிக..பாசம் கொண்டவர்.தனது அன்னை மீது அளவு கடந்த பிரியம் கொண்டவர்.தன்னைப் போலவே தனது குடும்பமும் போராட்டத்திற்கு பங்களிக்க வேண்டும் என விரும்பினார்.வெளிநாட்டில் வசித்த வந்த தனது சகோதரனை தமிழீழம் வரவழைத்து விடுதலைப்போராட்டத்தில் இணைத்தார்.வெளிநாட்டில் வசித்த தனது சகோதரியைக் கொண்டு அங்கிருந்து செய்யக் கூடிய பணிகளை செய்வித்த ஒரு மாபெரும் வீரன் சாள்ஸ்.தேசப்பற்றுக் கொண்ட நற்பண்புள்ள போராளியை மனைவியாகத் தேர்ந்தெடுத்தார்.தன்னுடைய மனைவி போராட்டத்திற்காக முழு நேரமும் பணி செய்ய வேண்டும் என விரும்பி.,தனது பள்ளி பருவ காதலை தூக்கி எறிந்தார்.அவரின் எண்ணம் போலவே அவருடைய மனைவியும் கடமைப் பற்றுள்ள போராளியாகவே திகழ்ந்தார். தன்னைச் சுற்றி இருப்பார்கள் அனைவரும் ஒடுக்கு முறைக்கெதிராக ஓயாது உழைக்க வேண்டும் என விரும்பிய வீரன்.
 
ஓயாது உழைத்த வீரனை சிங்களம் தன் துரோகத் தனத்துக்கு பலியாக்கியது.நாட்டுக்காக தன்னையே அர்பணித்த சாதனை வீரனின் இழப்பை தாங்க முடியாமல் தமிழினமே துடித்தது.சாதிக்க துடித்த அந்த வீரனை இழந்து பத்து ஆண்டுகள் கடந்து விட்டது.
 
ஆனால் அழியவில்லைஅந்த வீரனின் நினைவுகள்....ஆயிரம் ஆண்டுகள் ஆனாலும் வாழ்வான் அவன் வரலாறாய்...!
 
----கவனம் கவனம் தமிழர் தேச விடியல்
காணும் பொழுதில் கவனம்.பகை உளவு பார்க்க அதிக வழியில் தினமும் வருவான் கவனம்----!
 
கேணல் சாள்ஸ் அண்ணா
லெப் வீரமாறன்
லெப் காவலன்
லெப் சுகந்தன்.
அவர்களையும், இன் நாளில் நினைவு கூர்வதுடன், இவர்கள் தாகம் தீரும் வரை ஓயாது எம் பயணம்……………..
 
வீரவணக்கம்...வீரவணக்கம்....வீரவணக்கம்.
 
புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்
 
- நிலவன் -