• :
  • :
களத்தில்

யார் இந்த அப்துல் ரவூப் ? உங்களில் எத்தனை நபர்களுக்கு இவனை தெரியும்?

யார் இந்த அப்துல் ரவூப் ? உங்களில் எத்தனை நபர்களுக்கு இவனை தெரியும்?

1991 ஆம் ஆண்டிற்கு பிறகு தமிழகத்தின் மௌனமாய் உறைந்த இன உணர்வை உசுப்பிய நெருப்பு இவன் உருவாக்கியதே !

1995 டிசம்பர் 15 பெரம்பலூரில் பெரியார் சிலை அருகில் காலை 7 மணிக்கு ஈழத்தமிழர்களை காப்பாற்றுங்கள். ஈழத்தில் மக்கள் செத்துமடியும் போது தாய் தமிழகத்தில் சிங்கள விளையாட்டு வீரர்களுக்கு சிவப்பு கம்பள வரவேற்பா...?

சந்திரிகாவின் ஆட்சிக் காலத்தின் போது யாழ். குடா நாடு மீதான பெரும் படையெடுப்பின்போது பல இலட்சக்கணக்கான மக்களின் இடப்பெயர்வினால் துயருற்ற ஈழத்தமிழர்கள் மீதான சிறிலங்கா அரச பயங்கரவாதத்தை எதிர்த்து ...

தெற்காசிய விளையாட்டு போட்டிகளில் சிங்கள வீரர்களை அனுமதிக்காதே ! என முழக்கமிட்டு, தன் உடல் முழுவதும் மண்னென்னை நனைக்கப்பட்ட கம்பளி போர்வையை சுற்றிக்கொண்டு கைகளில் துண்டு பிரசுரங்களை ஏந்திக்கொண்டு தனக்கு தானே தீவைத்துக்கொண்டு முழங்கி சாய்ந்தான் அப்துல் ரவூப்.

ஆம், தமிழகத்தில் ஈழ மக்களுக்காக முதல் களப்பலி “முதல் நெருப்பு” அப்துல்ரவூப்... அவன் முத்துக்குமாருக்கு மூத்தவன் !

அப்துல்ரவூப்பின் போராட்ட முறையில் எமக்கும் உடன்பாடு இல்லை என்றாலும் அவனின் அந்த மனிதத்தை போற்றாமல் இருக்க முடியவில்லை.

எவ்வகையான போராட்ட முறைகளை கைக்கொள்வது என்பது அவரவர் உரிமை சார்ந்தது என்றாலும் அதை குறித்த மிக மோசமான விமர்சனங்களை அப்துல் ரவூப் இறந்த பின்னும் இன்னும் எதிர்கொண்டுதான் வருகிறான்.

அப்துல்ரவூப்பின் தியாகம் 16 ஆண்டுகளுக்கு மேல் ஏனோ பேசப்படவேயில்லை ?...

அவன் ஒர் இசுலாமியன் என்பதனாலா அவன் தீண்டப்படவில்லை என்பதும் இங்கே கேள்வியாகத்தான் இருக்கிறது.

தமிழர் நலம், தமிழீழம் பேசும் பெரும்பாண்மையான இயக்கங்கள், கட்சிகள் அப்துல்ரவூப்பின் தியாகத்தை பேசாமல் ஏனோ கடந்து செல்கிறார்கள் ?...

மறந்ததையும், மறக்கடிக்கப்பட்டதையும் நினைவு கூர்வோம்.