img/728x90.jpg
விக்ரர் கவச எதிர்ப்புப் படையணியின் சிறப்புத் தளபதி  கேணல் இளங்கீரன்/சேட்டன் அவர்களின் நினைவுத் தடம்...!

விக்ரர் கவச எதிர்ப்புப் படையணியின் சிறப்புத் தளபதி கேணல் இளங்கீரன்/சேட்டன் அவர்களின் நினைவுத் தடம்...!

விக்ரர் கவச எதிர்ப்புப் படையணியின் சிறப்புத் தளபதி 

கேணல் இளங்கீரன்/சேட்டன் அவர்களின் நினைவுத் தடம்...!

"ஆளுமை நிறைந்த வீரத் தளபதி"
 
வன்னியில் நடைபெற்ற இறுதிச் சமரின் போது 19.03.2009 அன்று விடுதலைப்புலிகளின் சமர்க்களத் தளபதிகளில் ஒருவரான கேணல் இளங்கீரன் வீரச்சாவடைந்தார்.
 
சேட்டன் என அழைக்கப்படும் கேணல் இளங்கீரன் மட்டக்களப்பைப் பிறப்பிடமாகக் கொண்டவர். நீண்டகாலம் இம்ரான்-பாண்டியன் படையணியில் பணியாற்றியவர். நிறையச் சமர்க்களங்களைச் சந்தித்தவர். லெப்.கேணல் அக்பரின் தலைமையில் லெப்.கேணல் விக்ரர் கவச எதிர்ப்பு அணி செயற்பட்ட காலத்தில் அவ்வணியின் தாக்குதற் தளபதிகளுள் ஒருவராகப் பணியாற்றியவர்.
 
ஓயாத அலைகள் – 3 இன்போது குடாரப்பில் தரையிறங்கிய புலியணிகள் இத்தாவிலில் பிரிகேடியர் பால்றாச்சின் தலைமையில் சண்டையிட்டபோது விக்ரர் கவச எதிர்ப்பு அணியையும் சமர்க்களத்தின் ஒரு பகுதியையும் வழிநடத்தியவர் இளங்கீரன்.
 
இவர் எல்லாளன் வீரகாவிய திரைப்படத்திலும் நடித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
 
"தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம்"