• :
  • :
களத்தில்

வறட்சி

வறட்சி

வறட்சி 

வற்றிப் போன நதிக்கரையின் ஓரங்கள்... 
இலேசாக தழும்பத் தொடங்கின...
 
துளிர் விட்டெழும்பவே... 
தத்தி தடவி மண்ணின் துளைதேடி.... 
நகர்ந்தது விழுதுகள்....
 
எங்கெங்கோ அலைந்து திரிந்த... 
நீர்ப்பறவைகள் இடம் மாறி... 
அந்த குளத்தின் ஓரத்தில் குந்த ஒரு இடம் தேடி ....
ஒதுங்கிக் கொண்டன.....
 
இயற்கையில்.... 
மாற்றங்கள் தோன்றுமென நம்பி ஏமாந்த உள்ளம் தனக்குள்...... 
சமாதான கீதம் பாடிக் கொண்டது.....
 
காணல் நீரின் தோற்றத்தில்.... 
ஏமாந்தெழுந்த அதன் விழிகள்... 
மீண்டும் தொடரப் போகும் வரட்சிக்கு... 
தன்னை தயார்படுத்திக் கொண்டது.
 
- ஈழத்து நிலவன் -


பெண்ணே!!
பெண்ணே!!
வறட்சி
வறட்சி