• :
  • :
களத்தில்

எதிர் வரும் 13ஆம் திகதி கிழக்கு பல்கலைக்கழக மருத்தவபீடம் திறப்பு!

எதிர் வரும் 13ஆம் திகதி கிழக்கு பல்கலைக்கழக மருத்தவபீடம் திறப்பு!

எதிர் வரும் 13ஆம் திகதி கிழக்கு பல்கலைக்கழக மருத்தவபீடம் திறப்பு!

கிழக்கு பல்கலைக்கழக மருத்துவ பீடத்தில் இனிமேல்  பகிடி வதை தொடராது என  மருத்துவ பீட மாணவர்களால்  பீடதிபதிக்கு எழுத்து மூலம் வழங்கப்பட்ட வாக்குறுதியையடுத்து எதிர் வரும் 13ஆம் திகதி முதல் கல்வி நடவடிக்கைகளுக்காக திறக்கப்படவுள்ளதாக கிழக்கு பல்கலைக்கழக மருத்துவ  பீட பீடாதிபதி  வைத்தியர் திருமதி  ஏஞ்சலா அருள்பிரகாசம் தெரிவித்தார் .
 
கிழக்கு பல்கலைக்கழக மருத்துவ பீட மாணவர்களினால் முன்னெடுக்கப்பட்ட பகிடிவதை வதை காரணமாக கடந்த மே மாதம் 25 ஆம் திகதி முதல் கிழக்கு பல்கலைக்கழக மருத்துவ பீடம்  கலவரையற்று மூடப்பட்டிருந்தது .
 
இந்த நிலையில் மருத்துவ பீட மாணவர்களுக்கு , மருத்துவ பீட பீடாதிபதிகள் மற்றும் விரிவுரையாளர்களுக்கும் இடையில்   நடைபெற்ற கலந்துரையாடலின் பின்  பகிடி வதை இனி மேலும் தொடராது என்று மருத்துவ பீட மாணவர்களால்  பீடதிபதிக்கு எழுத்து மூலம் வழங்கப்பட்ட வாக்குறுதியைப்  பரிசீலனை  செய்த கிழக்குப் பல்கலைக்கழக மூதவை  பீடம் கல்வி நடவடிக்கைகளுக்காக  மீண்டும் ஆரம்பிக்க ஆவன செய்துள்ளது. 
 
இதன்படி இறுதி ஆண்டு மாணவர்களின் கல்வி நடவடிக்கைகள் எதிர்வரும் ஜூன் 13ஆம் திகதி ஆரம்பிக்கப்பட உள்ளதுடன் தொடர்ந்து ஏனைய வருட மாணவர்களின்  கல்வி நடவடிக்கைகள் ஆரம்பமாகும்  என  கிழக்கு பல்கலைக்கழக மூதவை  பீட பீடாதிபதி  வைத்தியர் திருமதி  ஏஞ்சலா அருள்பிரகாசம் தெரிவித்தார்.