• :
  • :
களத்தில்

வடமராட்சி கிழக்கில் மீண்டும் படகு தீ வைப்பு சிங்கள மீனவர்களின் கைவரிசையாக இருக்குமென சந்தேகம்!

வடமராட்சி கிழக்கில் மீண்டும் படகு தீ வைப்பு சிங்கள மீனவர்களின் கைவரிசையாக இருக்குமென சந்தேகம்!

வடமராட்சி கிழக்கில் மீண்டும் படகு தீ வைப்பு சிங்கள மீனவர்களின் கைவரிசையாக இருக்குமென சந்தேகம்! 
 
வடமராட்சி கிழக்கு தாளையடியில் மீண்டும் படகு ஒன்று தீக்கிரையாக்கப்பட்டுள்ளது. குறித்த சம்பவம் இன்று அதிகாலை இனம் தெரியாத விசமிகளால் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
 
கடல் தொழிலைத் தனது ஜீவனோபாயமாக கொண்ட இரண்டு பிள்ளைகளின் தந்தையின் படகே எரியூட்டப்பட்டுள்ளது.
அண்மையில் கட்டைக்காடு கடற்கரையில் படகும் வெளியிணைப்பு இயந்திரமும் எரியூட்டப்பட்டிருந்தது இது இரண்டாவது சம்பவமாக இடம்பெற்றுள்ளது.
 
சிங்கள மீனவர்கள் இப்பகுதியில் கடலட்டை பிடிப்பதற்க்காக வந்த சில மாதங்களில் இவ்வாறான அசம்பாவிதங்கள் நடைபெறுகின்றன இச் சம்பவங்களின் பின்னணியில் இவர்கள் இருக்கலாம் என்று மீனவர்கள் விசனம் தெரிவித்துள்ளனர்.