img/728x90.jpg
 மட்டக்களப்பு – கல்முனை வீதியில் விபத்து ஒருவர் உயிரிழப்பு!

மட்டக்களப்பு – கல்முனை வீதியில் விபத்து ஒருவர் உயிரிழப்பு!

 மட்டக்களப்பு – கல்முனை வீதியில் விபத்து ஒருவர் உயிரிழப்பு!

 
மட்டக்களப்பு – கல்முனை வீதியில் இடம்பெற்ற கோர விபத்தில் படுகாயமடைந்த ஒருவர் உயிரிழந்துள்ளதாக காத்தான்குடி பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
 
மட்டக்களப்பு – கல்முனை வீதி தாளங்குடா சந்தியில் இன்று (திங்கட்கிழமை) காலை இடம்பெற்ற விபத்தில் கூலித் தொழிலாளியான 57 வயதுடைய எஸ். ஆறுமுகம் என்பவரே உயிரிழந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
மட்டக்களப்பிலிருந்து கல்முனை நோக்கிச் சென்ற கார் வேகக் கட்டுப்பாட்டை இழந்து தாளங்குடாவிலிருந்து காத்தான்குடி நோக்கி சைக்கிளில் வந்து கொண்டிருந்த கூலித் தொழிலாளி மீது மோதியதாலேயே குறித்த விபத்து இடம்பெற்றுள்ளது.
 
இவ்விபத்தில் படுகாயங்களுக்குள்ளாகிய நிலையில் ஆரையம்பதி மாவட்ட வைத்தியசாலையில் முன்னதாக அனுமதிக்கப்பட்டு பின்னர் மேலதிக சிகிச்சைகளுக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்ட நிலையிலேயே அவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
 
இவ்விபத்துக் குறித்த மேலதிக விசாரணைகளைக் காத்தான்குடி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.