img/728x90.jpg
மருத்துவத் தொழில் சேவை அடிப்படையில் நலிவுற்ற மக்கள் சார்ந்ததாக மாற வேண்டும் !

மருத்துவத் தொழில் சேவை அடிப்படையில் நலிவுற்ற மக்கள் சார்ந்ததாக மாற வேண்டும் !

மருத்துவத் தொழில் சேவை அடிப்படையில் நலிவுற்ற மக்கள் சார்ந்ததாக மாற வேண்டும் ! 

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் புதிதாக அமைக்கப்பட்ட தாதிகள் விடுதி மற்றும் இலங்கை அரச மருந்தாக்கல், கூட்டுத்தாபனத்தின் அரச  மருந்தகத் திற ப்பு விழா, மீள்வாழ்வு நிலையத்திற்கான அடிக்கல் நாட்டுவிழா நேற்று யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் இடம்பெற்றது. அதில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

அரசவைத்தியசாலைகளின் நெருக்கடிகளைக் குறைக்கும் விதமாக பல தனியார் மருத்துவமனைகள் ஆங்காங்கே தோன்றி சிறப்பாகச் செயற்படுகின்றன.

அரச மருத்துவமனைகளில் உடனடியாக மேற்கொள்ளப்பட முடியாத பல அறுவைச் சிகிச்சைகளும் மற்றும் இன்னோரன்ன சிகிச்சைகளும் உடனடியாகவோ அல்லது மறுதினமோ தனியார் மருத்துவ மனைகளில் மேற்கொள்ளக்கூடியதாக இருக்கின்றது.
ஆனால் அரச மருத்துவ மனைகளில் இது முடிவதில்லை. இதற்கான காரணம் போதிய மருத்துவ நிபுணர்கள் இன்மை, அறுவைச் சிகிச்சைக்கான சத்திர கூட நிலைய வசதிகளின் குறைபாடுகள், நோயாளிகளுக்கான இடப்பற்றாக்குறை மற்றும் வளப் பற்றாக் குறைகள் என்பன.

இவற்றின் காரணமாக அரச மருத்துவமனைகளில் இந்த அறுவைச் சிகிச்சைகளை மேற்கொள்ள முடியாதிருப்பது வேதனைக்குரியது. வாரங்கள், மாதங்கள் என்று நோயாளிகள் காத்துக்கொண்டிருக்க வேண்டியுள்ளது.

பிரத்தியேக மருத்துவமனைகளில் பணம் படைத்தவர்களும், வசதி படைத்தவர்களும் தமது சேவைகளைப் பெற்றுக் கொள்ள முடியுமாக இருக்கின்றது. ஆனால் நிதி நிலைமைகளில் நலிந்தவர்கள் தமது மருத்துவ சேவைகளை அரச மருத்துவமனைகளிலேயே பெற்றுக் கொள்ள முடியும். நலிந்த மக்களுக்கும் எமது சேவைகள் கிடைக்கப்பெற வேண்டும். அதற்கான வசதி வாய்ப்புக்கள் ஏற்படுத்திக் கொடுக்கப்படல் வேண்டும்.

அதே போன்று பிரத்தியேக மருத்துவ மனைகளும் பொருளீட்டத்தை மட்டும் முதன்மைக் காரணியாகக் கொள்ளாது சேவை அடிப்படையில் நலிவுற்ற மக்களுக்கு ஏதோ ஒரு வகையில் மருத்துவ சேவைகளை பெற்றுக்கொடுப்பதற்கு ஏற்ற வழி முறைகளை உருவாக்கித் தர வேண்டும்.

பிரத்தியேக மருத்துவமனைகளில் பணத்தைக் கறந்து எடுப்பதற்கென்றே சில உத்தி யோகத்தர்களை விசேடமாகச் சேவைக்கு அமர்த்தியிருப்பதாகப் பலரும் கூறக் கேள்விப் பட்டிருக்கின்றேன். அவர்களின் பெயர் விபரங்களைக் கூட பொது க்கள் வெளியிடு கின்றார்கள். இவர்களின் செயற்பாடு பிரத்தியேக மருத்துவமனைகளின் நிர்வாகக் கட்டமைப்புக்கும் வருமானத்திற்குமாக சில வேளைகளில் ஏற்புடையதாக இருக்கலாம்.

ஆனால் அங்கு மாலை நேரங்களிலும் இரவு நேரங்களிலும் தமது தூக்கம், குடும்ப சூழல் எல்லாவற்றையும் மறந்து சேவையாற்றச் செல்லுகின்ற வைத்திய நிபுணர்களின் பெயர்களுக்குக் களங்கம் கற்பிக்கக் கூடிய வகையில் அவை இடம் பெறக் கூடாது. சுண்டங்காய் காற்பணம் சுமை கூலி முக்கால் பணம் என்பது போன்று வைத்திய நிபு ணர்களுக்குக் கிடைக்கும் ஊதியம் மக்களிடம் அறவிடப்படும் பணத்தில் எட்டில் ஒரு பங்கு கூட இருக்குமோ தெரியாது.
கால்வாசி கூட இல்லை என்பது நிச்சயம். இந்த அட்டூழியங்கள் குறித்து வைத்திய நிபுணர்களும் அறிந்து வைத்திருக்க வேண்டும்.

நீங்கள் இவ்வாறான மருத்துவமனைகளுக்குச் சில அறிவுறுத்தல்களை வழங்க முடியும். இவ் வாறான மருத்துவமனைகளின் சேவைகள் பொதுவானதாகவும் எல்லா மக்களுக்கும் ஓரளவுக்கேனும் ஏற்புடையதாகவும் அமையாதவிடத்து அம் மருத்துவமனைகளில் நீங்கள் வழங்குகின்ற சேவைகளை விலத்திக் கொள்ளப் போகின்றீர்கள் எனத் தெரிவியுங்கள். உடனே அவர்கள் வழிக்கு வருவார்கள்.

இதன் மாற்றொழுங்காக அரச மருத்துவ மனைகளில் கூடுதல் கவனம் எடுத்து தற்போது நீங்கள் வழங்குகின்ற அர்ப்பணிப்புடனான சேவையை விட ஒரு படி மேலாகச் சென்று முடிந்தளவு பொருளாதார வசதியில் நலிந்தவர்களை அவர்களது நோய்களின் தன்மைகளிற்கேற்ப அவர்களுக்கான மருத்துவச் சேவைகளை வழங்குகின்ற போது உங்களைக் கடவுளுக்கு ஒப்பானவர்களாக இந்தச் சமூகம் நோக்கும்.

உங்கள்; வள மான வாழ்விற்காகத் தினமும் பிரார்த்தனை பண்ணுவார்கள். உத்தம தொழில்களில் ஆசிரியத்தொழிலுக்கு அடுத்து மருத்துவ தொழில் இடம்பெறுகின்றது. அது மக்கள் சார்ந்ததாக இருக்க வேண்டும். பணம் சார்ந்ததாக இருக்கப்படாது.
மூன்றாவது உத்தம தொழில் சட்டத்தரணித் தொழில். ரோமர்கள் காலத்தில் சட்டத் தரணிகளின் கறுத்த அங்கிகளின் பின் புறத்தில் ஒரு சட்டைப் பை இருந்தது. கட்சிக் காரர்கள் வேண்டிய தொகையை அதில் போட்டுச் செல்வார்கள்.

பணம் கிடைத்தாலோ கிடைக்காவிட்டாலோ சட்டத்தரணியின் திறமை மக்கள் சார்பாக மன்றில் காட்டப்பட வேண் டியிருந்தது. அந்தக் காலத்தில் பணம் சார்ந்த தாக சட்டத்தரணித் தொழில் இருக்கவில்லை மருத்துவத் தொழிலும் மக்கள் சார்ந்ததாக மாற வேண்டும் என மேலும் தெரிவித்தார் மருத்துவத் தொழில் மக்கள் சார்ந்ததாக மாற வேண்டும் என வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.