• :
  • :
களத்தில்

கனகராயன்குளம் பகுதியில் சிறீலங்கா காவல்துறை தமிழீழ போராளி மீது மிசேச்சத்தனமான தாக்குதல்!

கனகராயன்குளம் பகுதியில் சிறீலங்கா காவல்துறை  தமிழீழ போராளி மீது மிசேச்சத்தனமான தாக்குதல்!

கனகராயன்குளம் பகுதியில் சிறீலங்கா காவல்துறை  தமிழீழ போராளி மீது மிசேச்சத்தனமான தாக்குதல்!

வவுனியா வடக்கு கனகராயன்குளம் பகுதியில், கனகராயன்குளம் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி சிவில் உடையில் தம்மை தாக்கியதாக தெரிவித்து 14 வயது மாணவி உட்பட ஓரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் மாங்குளம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
 
அது தொடர்பில் கருத்துத் தெரிவித்த சிறுமியின் தாயார்,எனது கணவருடன் தாவூத் ஹோட்டல் உரிமையாளர் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். 
 
வாக்குவாதத்தில் ஈடுபட்டு விட்டு சென்ற ஹோட்டல் உரிமையாளர் பொலிசாரை வரவழைத்து விட்டு 10 நிமிடத்திற்குள் மீள வந்து எனது கணவரை வலிந்து சண்டைக்கு இழுத்தார். 
 
இதன்போது எனது கணவர் எமது காணி வேலியருகில் சென்ற போது அங்கு சிவில் உடையில் பொலிஸ் வாகன்தில் வந்த கனகராயன்குளம் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி எனது கணவரை கடுமையாக தாக்கினார். 
 
இதை அவதானித்து தடுக்க சென்ற பாடசாலை செல்லும் எனது மகனையும் கழுத்தை நெரித்து தாக்கினார். இச்சம்பவத்தை அவதானித்த நான் கைக்குழந்தையுடன் தடுக்க சென்ற போது என்னையும் தள்ளி விழுத்தி கனகராயன்குளம் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தாக்கினார்.
 
இதன்போது நான் அணிந்திருந்த சட்டை பொலிசாரால் கிழிக்கப்பட்டுள்ளது.