• :
  • :
களத்தில்

மஹிந்த ,கோத்தாவை காப்பாற்ற ஜ.தே.க சபதம்!

மஹிந்த ,கோத்தாவை காப்பாற்ற ஜ.தே.க சபதம்!

முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச மற்றும் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ச மீது சர்வதேச சமூகம் கைவப்பதற்கு அனுமதிக்கமாட்டோம் என அமைச்சர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.

முன்னாள் ஜனாதிபதி மற்றும் பாதுகாப்பு செயலாளரை படைத்தளபதிகள் மற்றும் படையினரை காட்டிக்கொடுக்கும் தேசத்துரோகிகள் என அரசாங்கத்தை பொது எதிரணியினர் விமர்சிப்பதாக அமைச்சர் தெரிவித்துள்ளார்.
எனினும் அவர்கள் மீது போர்க்குற்றச்சாட்டுகளை சுமத்தி அவர்களை சர்வதேச நீதிமன்றத்தில் ஏற்றுவதற்கு முயற்சி செய்வது சர்வதேச சமூகமே அன்றி அரசாங்கம் இல்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அவ்வாறு போர்க்குற்றச்சாட்டுகளின் பேரில் அவர்கள் மீது கைவைப்பதற்கு அரசாங்கம் எந்த சந்தர்ப்பத்திலும் இடமளிக்காது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

மகிந்த ராஜபக்சவும் கோதபாய ராஜபக்சவும் எமக்கு வேண்டும் அவர்களை அரசாங்கம் எப்போதும் பாதுகாக்கும் அவர்கள் மீது கைவைக்க ஓருபோதும் நாம் விடமாட்டோம் என்றும் சஜித்பிரேமதாச குறிப்பிட்டுள்ளார்.