img/728x90.jpg
கேள்விக்கென்ன பதில்

கேள்விக்கென்ன பதில்

தற்போதைய சூழ்நிலையில் நடுசென்றராக சிந்திக்கும் நட்டநடுநிலையான ஊடகர்களையும் பதிவர்களையும் எப்படிக்கண்டு பிடிப்பது?

பதில்:- வெரி சிம்பில்.

ஆனால் இப்பிடி நடு செண்டர் ஆட்கள் பலவகை இருக்கினம். பகுதி பகுதியாக பார்ப்பம்.

இலங்கை அரசு அரசியலமைப்பு கொண்டு வந்து எம்மை அழிக்கும் முயற்சி நடக்கும் போது, அதை சொற்களால் விளையாடி  மக்களை ஏமாற்றுவது பற்றி கதைக்கமாட்டாரக்ள் .

குறைந்த பட்சம் அந்த அரசியலமைப்பினை தாம் ஏற்றுக்கொண்டு எழுதுகிறோம் எனவும் வெளிப்படையாக சொல்லமாட்டார்கள்.ஏனெண்டால் அது வெட்கம்.
ஆனால் , அந்த அரசியலமைப்பு பற்றி கதைக்காது, ஏதாவது தொலைக்காட்சியில் நடந்த ஒரு அரசியல்வாதியின் பேட்டி பற்றி கடும் சமூக அக்கறையுடன் கட்டுரை எழுதுவார்கள்.

இன்னொரு வகை கூட்டம் இருக்கிறது.

எந்தவொரு கூட்டு அணிக்கும் இருக்கவேண்டிய ஒரு கூட்டு அணிக்கான தார்மிக பொறுப்பை மிகக்கேவலமாக உதாசீனப்படுத்தி, சக கட்சி ஆட்களை விலைக்கும் பதவிக்கும் வாங்கி, ஏனைய கட்சிகளை அவமானப்படுத்தி, அவர்களை அந்த கூட்டு அணியை விட்டு தாமாக விலகச்செய்வது பற்றி எதுவும் கதைக்கமாட்டார்கள் .

அதே நேரம் , எவ்வளவு சாணக்கியமாக , எவ்வளவு  கெட்டிகாரத்தனமாக ஏனைய கட்சிகளை தாமாகவே வெளியேறப்பண்ணுகிறார். 

எவ்வளவு வடிவாக பொய் சொல்லுகிறார் என பொய்யையும் அநீதியையும் கதாநாயகத்தன்மை உடையதாக சிலாகித்து பதிவிடுவார்கள் அல்லது பத்தி எழுத்து எழுதுவார்கள் ஒரு வகை நடுநிலை ஊடகர். 

அதில் சிலர் pay roll இற்காக இயங்கும் கடும் நடுநிலையானவர்கள். பாவம்.

இன்னொரு நட்ட நடுநிலை நடுசெண்டர் ஆட்கள் இருக்கினம். 

அவைக்கு எங்க அடிச்சாலும் பின்னங்கால் மட்டும்தான் தூக்குப்படும்.

அவை மேல சொன்னதையும் செய்வினம். அதை விட, இப்ப நடந்த  பிளவை பற்றி அதன் அடிப்படையை பற்றி கதைக்காது , கஜேந்திரகுமார் தான் அல்லது பேரவை தான் காரணம் என பத்தி எழுதுவினம்.

அல்லது, கூட்டு அணி தர்மத்தை மீறி நடக்கும் கேவலங்களை கதைக்காது,  என்ன்னதான் இருந்தாலும், கஜேந்திரகுமாரால தலைமையேற்க முடியாது. அவர் இதை பாவிக்கவில்லை எண்டு கஜேந்திரகுமாரின் மட்டும் காதல் கொண்டு இயங்குவினம்.

இப்படி நடுசெண்டர் பலவகை.
அதில் இவை சிலவகை.

நடுசெண்டர் பதிவுகள் தொடரும்....

- உலக மகா சாணக்கியன் -