img/728x90.jpg
img/728x90.jpg
ம . ஆ . சுமந்திரனினை இலங்கைத் தமிழரசுக் கட்சியிலிருந்து நீக்குமாறு அதன் மத்திய குழு உறுப்பினர் மறவன்புலவு சச்சிதானந்தன் கோரியுள்ளார்!

ம . ஆ . சுமந்திரனினை இலங்கைத் தமிழரசுக் கட்சியிலிருந்து நீக்குமாறு அதன் மத்திய குழு உறுப்பினர் மறவன்புலவு சச்சிதானந்தன் கோரியுள்ளார்!

தமிழரசு நாடாளுமன்ற உறுப்பினரான மதியாபரணம் ஆபிரகாம் சுமந்திரனினை இலங்கைத் தமிழரசுக் கட்சியிலிருந்து நீக்குமாறு அதன் மத்திய குழு உறுப்பினர் மறவன்புலவு சச்சிதானந்தன் கோரியுள்ளார்.

எங்களுடைய உப்பைத் தின்றுவந்து எங்களுடைய கட்சியிலிருந்து ஒருவரைத் திருடி அரை அமைச்சராகப் பதவிப் பிரமாணம் செய்திருக்கின்ற மோசமான செயலை செய்திருக்கின்ற ஜனாதிபதி நீ.

உனக்கு நாங்கள் எப்படி ஆதரவு கொடுக்க போகிறோம்.

எங்களுடைய மக்களைக் கூறு போடுவதற்கா உன்னை நாங்கள் கொண்டு வந்தோம்?

காப்பற்றியது நாங்கள் அல்லவா. சூழ்ச்சி செய்கின்ற கபடமான ஜனாதிபதியாக நீ மாறியிருக்கின்றாய்.

இது உன்னுடைய அழிவுக்கு ஆரம்பம்.

மேலேயுள்ளவற்றில் நீ என்ற உச்சரிப்பின் தொனிதான் சிக்கலானதாக உள்ளது. இக்காலத்தில் நீ, உன்னை, வாடா, வாடி போன்ற சொற்களைக் கணவனும் மனைவியும் பரிமாறும் சிற்றின்ப நேரங்களையோ, கடவுளும் அடியவனும் பரிமாறும் பேரின்ப நேரங்களையோ அறியாதவல்லர் தமிழர்.

தமிழர் சார்பாளர் ஒருவர் சினந்து வெறுப்பைச் சிந்தியாவாறு, சிங்களத் தலைமைச் சார்பாளரை நீ என விளித்தல், தமிழரின் மரபல்ல. முதிர்ச்சியற்ற வெறுப்பைத் தூண்டும் பேச்சு. ஆற்றாமையின் உச்ச வெளிப்பாடு. தமிழரின் அறிவார்ந்த அணுகுமுறைக்கு ஊனமானது.

சினம் என்னும் சேர்ந்தரைக் கொல்லி என்ற குறள் வரி தெரிந்தவர் இவ்வாறு பேசார்.

இதை உணர்ந்து படித்தவர் தந்தை செல்வா, அவர் இவ்வாறு பேசார் ஒருவேளை சோற்றுக்காக உணராமல் படித்தோர் நீ எனச் சினந்து வெறுப்பை உமிழ்வர்.

சம்பந்தன் அவர்கள் முன்பும் ஆஸ்திரேலியப் பேச்சுக்காகத் சுமந்திரனைக் கண்டித்தவர். இப்பொழுதும் அவர் இத்தகைய உரையை ஏற்கார்.

1960இன் இரண்டாவது தேர்தலில் 1971 தேர்தலில் தமிழரசுக் கட்சியின் சிலரின் இவ்வாறான பெறுப்பற்ற உரையால் சிங்கள மக்கள் தமக்குத் தாமே தமிழர் ஆதரவு இல்லாமல் ஆட்சி அமைத்தார்கள்.

சிங்கள மக்களை ஒன்றிணைத்துத் தமிழர் ஆதரவில்லாத ஆட்சியை 2018க்குப் பின் வரும் தேர்தலில் சிங்களவர் தேர்வார்கள், 1960இல் வந்த ஆட்சி, 1971இல் வந்த ஆட்சி இரண்டுமே தமிழரைத் திட்டமிட்டு நசுக்கிய ஆட்சிகள்.

2018க்குப் பின்னரும் தமிழரை நசுக்கும் ஆட்சியைத் தேர்ந்தெடுக்கச் சிங்களவரைத் தூண்டிய சுமந்திரன் அவர்களைத் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் அனைத்துப் பொறுப்பகளில் இருந்தும் விடுவிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.

1961இல் இலங்கைத் தமிழரசுக் கட்சி சார்பில் தமிழகத் தலைவர்களைச் சந்தித்து ஆதரவு கேட்ட நாள் முதலாக இன்றுவரை, ஈழத் தமிழர் நலம் காக்க எவ்வித எதிர்பார்ப்பும் இன்றி, எந்தவிதப் பதவி ஆசையும் இன்றி, கட்சியின் அடிமட்டத் தொண்டனாகப் பணிபுரிந்து வருகிறேன்.

1977இல் கட்சியின் நடுவண் குழுவுக்கு அமிர்தலிங்கம் என்னைப் பணியமர்த்தினார். தந்தை செல்வா நினைவு அறங்காவல் குழுச் செயலாளராக்கினார்.

1989இல் உங்களை நாடாளுமன்ற உறுப்பினராகத் தேர்ந்த கொழும்பில் நடந்த நடுவண் குழுக் கூட்டத்திலும் இருந்தேன். பின்னர் தமிழகத்திலும் தில்லியிலும் உங்களோடு கட்சிக்காக நான் உழைத்ததை நீங்கள் நன்கு அறிவீர்கள். கடந்த வாரம் அனைத்துலகத்தைக் கலந்தே ஆதரவு யாருக்கு எனத் தீர்மானிப்போம் என்ற உங்கள் அறிவார்ந்த அறிக்கையை ஆதரித்து வெளிப்படையாகக் கருத்துக் கூறியிருந்தேன்.

2015இல் வவுனியாப் பொதுக்கூட்டத்தில் கட்சியின் நடுவண்குழு உறுப்பினானேன்.

தயைகூர்ந்து நடுவண் குழுவைக் கூட்டித். சுமந்திரன் அவர்களைக் கட்சியின் அனைத்துப் பொறுப்புகளில் இருந்தும் விடுவிக்க நடவடிக்கையெடுக்க மறவன்புலவு க. சச்சிதானந்தன் கோரியுள்ளார்.