img/728x90.jpg
வெள்ள அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட வன்னி மக்களிற்காக நற்பிட்டிமுனை விவோகானந்தா கழகத்தின் ஏற்பாட்டில் உதவிகள்!

மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டு நிர்க்கதியாகியுள்ள வன்னி கிளிநொச்சி ,முல்லைத்தீவு மாவட்ட மக்களுக்கான மனித நேயப்பணியாக நற்பிட்டிமுனை விவேகானந்தா விளையாட்டுக் கழகத்தால் இன்று (25) உலர் உணவு நிவாரணப் பொருட்கள் நற்பிட்டிமுனை கிராமத்தில் சேகரிக்கப்பட்டன.
 
உலர்உணவுகள், சவர்க்காரம், குடிநீர் போத்தல்கள், மெழுகுவர்த்தி, உடைகள், பாய், நுளம்புவலை, பால்மா பைகள் என சேகரிக்கப்பட்ட ஒரு தொகை பொருட்கள் கிழக்கில் இருந்து சேகரிக்கப்பட்ட ஏனை பிரதேச பொருட்களுடன் சேர்த்து அனுப்பி வைக்கப்படவுள்ளது.
 
வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்காக கிழக்கு மாகாணத்தின் பல பகுதிகளிலும், பல கிராமங்களிலும் இளைஞர்கள் ஆர்வமாக உலர் உணவுப் பொருட்களை சேகரித்து வருகின்றனர்.