• :
  • :
களத்தில்

கிளிநொச்சியில் நடைபெற்ற போராட்டத்தில் குழப்பத்தில் ஈடுபட்ட நபர்கள் நாடாளுமன்ற உறுப்பினர் சிறிதரனின் அடியாட்கள்!

கிளிநொச்சியில் நடைபெற்ற போராட்டத்தில் குழப்பத்தில் ஈடுபட்ட கறுப்பு சட்டை அணிந்தோர், தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள்,வடமாகாண சபையின் முன்னாள் உறுப்பினர்களுடன் கூடிக் கதைக்கும் புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டு வருகின்றன.

வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களால் கிளிநொச்சியில் நேற்றுப் போராட்டம் நடத்தப்பட்டது.

குறித்த போராட்டத்தில் கறுப்பு சட்டை அணிந்து வந்த சிலர் குழப்பத்தை ஏற்படுத்தியதுடன்,யாழ்.பல்கலைகழக மாணவர் ஒருவர் மீது தாக்குதலை மேற்கொண்டனர்.

ஒலிபெருக்கி சாதனத்தின் வயர்களை பிடுங்கி எறிந்தும் , ஊடகவியலாளர்கள் , போராட்டத்தில் கலந்து கொண்டவர்களையும் அச்சுறுத்தியும் இருந்தனர்.

அவ்வாறாக குழப்பத்தில் ஈடுபட்ட நபர்கள் நாடாளுமன்ற உறுப்பினர் சிறிதரனின் ஆதரவாளர்கள் எனத் தெரிவிக்கப்படுகிறது.

போராட்டத்தில் குழப்பங்களை ஏற்படுத்த முதலே குழப்பக்காரர்கள் நாடாளுமன்ற உறுப்பினர்களான சித்தார்த்தன்,செல்வம் அடைக்கலநாதன்,சிறிதரன்,சாள்ஸ் நிர்மலாதன் மற்றும் முன்னாள் வடமாகாண சபை உறுப்பினர்களான ரவிகரன் சத்தியலிங்கம் ஆகியோருடன் கலந்துரையாடல் நடத்தியதாகவும்.  

அதன் பின்னரே குறித்த நபர்கள் குழப்பத்தில் ஈடுபட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது.