• :
  • :
களத்தில்

யாழ்ப்பாணத்தில் மாபெரும் மக்கள் எழுச்சிப்போராட்டம்!

யாழ்ப்பாணத்தில் மாபெரும் மக்கள் எழுச்சிப்போராட்டம்!

யாழ்ப்பாணத்தில் மாபெரும் மக்கள் எழுச்சிப்போராட்டம்! 

யாழ்பல்கலைக்கழக சமூகத்தால் அழைப்புவிடுக்கப்பட்டு மிகப்பெரிய அளவில் ஆரம்பிக்கப்பட்டுள்ள மக்கள் எழுச்சிப்போராட்டம் சற்று முன்னர் ஆரம்பித்துள்ளது.

ஜெனிவா மனித உரமை கூட்டத்தொடர் ஆரம்பிக்கப்பட்டு தற்போது நடைபெற்றுவரும் சூழலில் ஈழத்தமிழ்மக்கள் மீது நடாத்தப்பட்ட இனவழிப்பிற்கு பாரபட்சமின்றிய சர்வதேச விசாரணை வேண்டுமெனக்கோரியும் இனப்படுகொலையை விசாரணையை சர்வதேச குற்றவியல் நீதிமன்றுக்கு கொண்டு செல்லக்கோரியும் இப்போராட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

பல்கலைக்கழக மாணவர்கள்,விரிவுரையாளர்கள், ஊழியர்கள்,மதகுருக்கள்,காணாமல் போனோரின் உறவுகள்,சட்டத்தரணிகள், மருத்துவர்கள்,அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள்,அரச அரசார்பற்ற நிறுவனங்களின் பிரதிநிதிகள், பொதுமக்கள், கிழக்கு பல்கலை மாணவர்கள்,வவுனியா வளாக மாணவர்கள், யாழ்பல்கலையின் கிளிநொச்சியில் அமைந்துள்ள பொறியில் மற்றும் தொழினுட்பப்பீடங்களின் மாணவர்கள், வர்த்தகர்கள் என பலரையும் ஒருங்கிணைத்து பல்கலைக்கழக சமூகத்தினரால் இந்தப்போராட்டம் வெற்றிகரமாக ஆரம்பிக்கப்பட்டு நடைபெற்று வருகின்றது.

பேரணி யாழ்வைத்தியசாலை யூடாக தற்போது நகர்கின்றது.

பால், வயது வேறுபாடின்றி கொழுத்தும் வெயிலிலும் பெருமளவானோர் உணர்ச்சி பொங்கக் கலந்து கொண்டுள்ளனர். பேரணியில் கலந்து கொண்டவர்கள் ஐ.நா மனித உரிமைப் பேரவையில் ஈழத்தமிழருக்கு நீதி வேண்டும் எனச் சாரப்பட்ட கோசங்களை எழுப்பியதுடன், பதாதைகளையும் தாங்கிச் செல்கின்றனர்.

பேரணி யாழ்.முற்றவெளி மைதானத்தை சென்றடைந்ததும் அங்கு பிரகடனம் வாசிக்கப்படும்.