img/728x90.jpg
சுயநிர்ணய உரிமைக்காக உண்மையில் போராடிக் கொன்டிருக்கின்ற அனைவரும் தொடர்ந்தும் இலக்கு வைக்கப்படுகின்றார்கள்!

சுயநிர்ணய உரிமைக்காக உண்மையில் போராடிக் கொன்டிருக்கின்ற அனைவரும் தொடர்ந்தும் இலக்கு வைக்கப்படுகின்றார்கள்!

சுயநிர்ணய உரிமைக்காக உண்மையில் போராடிக் கொன்டிருக்கின்ற அனைவரும் தொடர்ந்தும் இலக்கு வைக்கப்படுகின்றார்கள்!

 
ஐ.நாமனித உரிமைகள்பேரவை - கஜேந்திரகுமார் பொன்னம்பலம்
 
அமர்வு: 40            விடயம்: 08                     பொதுவிவாதம்
 
ஒருமக்கள்குழுமமானது, ஐ.நாபட்டயத்தின்பிரகாரம், எதற்காகவும் பாராதீனப்படுத்தப்பட முடியாததம்
சுயநிர்ணய உரிமையை அனுபவிப்பதற்காக எந்தவொரு சட்ட பூர்வ நடவடிக்கையையும் எடுப்பதற்கு அந்தமக்கள் கூட்டத்தினர் உரித்துடையவர்கள் என்பதை வியன்னா பிரகடனம் மற்றும் வியன்னா நிகழ்ழ்சி திட்டம் என்பன அங்கீகரிக்கின்றன.
 
சிறிலங்கா அரசின்கட்டமைக்கப்பட்ட இன அழிப்பை எதிர்கொண்டு நிற்கும் தமிழ்த்தேசமானது ஒருபோதும் பாராதீனப்படுத்தபட முடியாததம் சுயநிர்ணய உரிமையை அடைவதற்காக இலங்கையில் தொடர்ந்தும் போராடிக்கொண்டிருக்கிறது.
 
சிறிலங்காஅரசானதுவன்முறையைகையிலெடுத்தபோதுஅதற்கானஎதிர்வினையாகதமிழர்தரப்பும்ஆயுதத்தைகையில்எடுக்கநேர்ந்த்து. ஆனால் அதேவேளை, தமிழ்விடுதலைஅமைப்பினைமட்டுமினறி, தனது பார்வையில் தமிழர்களின் சுயநிர்ணய உரிமைக்கான போராட்டத்திற்கு ஆதரவு வழங்கிபவர்கள் என கருதப்படும் தனிநபர்கள் மற்றும் அமைப்புகள் என அனைவரையும் சிறிலங்கா அரசானது தனது இலக்காககருதியது.
 
இப்படியானவர்களுள்ஊடகஅமைப்புக்கள், ஊடகவியலாளர்கள்மற்றும் ஊடக தொழிலாளர்கள் ஆகியோரே பெருமளவில் பாதிக்கப்பட்டிருக்கின்றனர்.
 
போர் நடந்த காலப்பகுதியில் சிறிலங்காவில் கொல்லப்பட்ட 48  ஊடகவியலாளர்களுள் 41 பேர் சிறிலங்கா அரசாங்கத்தினால் படுகொலைசெய்யப்பட்ட தமிழ் ஊடகவியலாலர்கள் ஆவார்கள். தமிழர்களல்லாத ஏனையஅந்த 7 ஊடகவியலாளர்களில் ஆகக்குறைந்தது இரு ஊடகவியலாளார்கள், தமிழர்கள் மீதான அரச ஒடுக்கு முறையை வெளிப்படுத்தியமைக்காக அரசினால் கொல்லப்பட்டவர்கள் ஆவர்.
 
தமிழ்த்தந்தி எனப்படும் ஊடக நிறுவனம் சிறிலங்கா  அரசின் ஆகப்பிந்திய இலக்காகஅ மைந்துள்ளது. தமிழர்களின் சுயநிர்ணய உரிமைக்காக போராடிய மாவீரர் ஒருவர் பற்றிய கட்டுரை ஒன்றை பிரசுரித்தமைக்காக அவர்கள் பயங்கரவாதத்தடுப்பு பிரிவினால் அச்சுறுத்தப்படதோடு சட்ட நடவடிக்கைக்கும் உள்ளாக்கப்பட்டுள்ளார்கள். 
 
பயங்கரவாதத்தடைச்சட்டம்நீக்கப்படும்எனஇந்தசபைக்குசிறிலங்காஅரசுஉறுதியளித்துள்ளநிலையிலும்கூட பயங்கரவாதத் தடுப்புப்பிரிவின் இந்த நடவடிக்கை இடம் பெற்றிருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.
 
சுயநிர்ணய உரிமையை வெறுமனே ஒரு குறியீட்டுப்பொருளாக மட்டும் ஐக்கியநாடுகளும் இந்த அவையும் தொடர்ந்தும் அணுகுமேயானால், சுயநிர்ணய உரிமைக்காக உண்மையில் போராடிக் கொன்டிருக்கின்ற அனைவரும் தொடர்ந்தும் இலக்கு வைக்கப்படுவார்கள் என்பதை இங்கு சுட்டிக்காட்டுகின்றேன்.
 
 
 
HUMAN RIGHTS COUNCIL               Delivered by:- Gajendrakumar Ponnambalam
40th Session
ITEM 8 – General Debate
 
I thank you Mr. President,
This statement is made in collaboration with the Tamil National People’s Front.
The VDPA recognizes the right of peoples to take any legitimate action, in accordance with the Charter of the United Nations, to realize their inalienable right of self-determination.
The Tamil Nation in Sri Lanka has beed struggling to realize its inalienable right to self determination in the face of structural genocide committed by the Sri Lankan state. When the state turned violent, the Tamils took to armed resistance.
 
The Sri Lankan state however has not only gone after the Tamil liberation movement but also any individual or institution that has in its perception supported the struggle for self determination. Media institutions, journalists and media workers have been amongst the worst affected. Of the 48 media persons that were killed during the war, 41 were Tamil who were targeted by the state, and even amongst the seven non Tamils who were killed, at least two of them were killed for exposing state atrocities against the Tamils.
 
The Sri Lankan government’s latest target is the media institution Thamil Thanthi. Its staff have been threatened by the notorious Terrorist Investigation Division with legal action for publishing an article about a martyr who struggled for the right to self determination. This is despite the Govt assuring this council that it will repeal the PTA.
 
For as long as the UN and this council treats the right to self determination with mere tokenism, those who truly struggle to realize this inalienable right will continue to be victims.