img/728x90.jpg
தமிழர் தேசத்தை ஆழிப் பேரலைகள் தாக்கிய நாள் இன்று.

தமிழர் தேசத்தை ஆழிப் பேரலைகள் தாக்கிய நாள் இன்று.

தமிழீழ வரலாற்றில் இன்றைய நாள் மிக முக்கியமான பதிவுகளை விட்டுச் சென்றுள்ளது.

ஆழிப் பேரலைகள் தாக்கிய போது சிங்கள, இந்திய அரச எந்திரத்தை விட தமிழீழ அரசு மிக வேகமாக செயற்பட்டு மீட்பு பணிகளை திறம்படச் செய்தது வரலாற்றில் தெளிவாகப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

முதல் முறையாக புலிகளின் நிர்வாக அலகை மையப்படுத்தி 'நடைமுறை அரசு' ( de facto state) என்ற சொற் பிரயோகம் அப்போதுதான் அனைத்துலக மட்டத்தில் பரவலாகப் பேசப்பட்டது.

விடுதலை என்பது இன்னொரு பக்கம் அழிவும் துயரமும் நிறைந்தது. அதற்கு இந்த ஆழிப்பேரலையும் ஒரு உதாரணம். எமது மக்கள் கொத்துக் கொத்தாக அழிந்தார்கள். ஆனால் மறுவளமாக தமிழர் தேசத்தின் ஆளுமையும் விடுதலை வேட்கையையும் உலகறிந்து கொண்டது.

இதுவே மறுவளமாக புலிகளை எப்படியாவது அழித்தொழித்துவிட வேண்டும் என்ற நிலைக்கு மேற்குலக - இந்திய அரசுகளை தள்ளியது.

குறிப்பாக இந்திய கொள்கை வகுப்பாளர்களால் புலிகளின் இந்த நிர்வாகத் திறனை செரித்துக் கொள்ள முடியவில்லை.

படைத்துறை ரீதியாக மட்டுமல்ல - நிர்வாக ரீதியாகவும் ஒரு ஆளுமையுள்ள ஒரு தேசத்தை ஒரு தனி மனிதன் யாருடைய உதவியுமின்றி கட்டி யெழுப்புவதை பின்பு எப்படித்தான் இந்த உலக பயங்கரவாத கூட்டணி ஏற்றுக் கொள்ளும்?

விளைவே தமிழின அழிப்பினூடாக தமிழீழ நடைமுறை அரசு அழித்தொழிக்கப்பட்டது.

ஆனாலும் இந்த அழிவின் எதிர்வினையாக - மறு விளைவாக 'நந்திக்கடல்' தமிழர் தேசம் குறித்த கோட்பாட்டுருவாக்கத்துடன் தன்னை முழுமையாக வெளிப்படுத்தி நிற்கிறது.

இதுவே எமது விடுதலைக்கான சூத்திரமாக மட்டுமல்லாமல் உலகின் போராடும் இனங்களின் சூத்திரமாக உருமாறி உலக பயங்கரவாத அரச கூட்டணிக்கு எதிரான ஒரு கருத்தியலாக உருத்திரண்டு வருகிறது.

இதுவே பிரபாரனியத்தை இந்த நூற்றாண்டின் தலை சிறந்த கோட்பாடாக வரலாற்றில் பதிவு செய்ய ஏதுவாகிறது.