• :
  • :
களத்தில்

வட்டுக்கோட்டை. யாழ்ப்பாணக் கல்லூரி மாணவர்கள் நால்வருக்கு 3ஏ

வட்டுக்கோட்டை. யாழ்ப்பாணக் கல்லூரி மாணவர்கள் நால்வருக்கு 3ஏ

வட்டுக்கோட்டை யாழ்ப்பாணக் கல்லூரி மாணவர்கள் 4 பேர் 3ஏ பெறுபேற்றைப் பெற்றனர்.

இன்று வியாழக்கிழமை அதிகாலைவரை இணையத்தளத்தில் பெறப்பட்ட பெறுபேறுகளின் அடிப்படையிலேயே இந்த முடிவுகள் கிடைக்கப்பெற்றன.

யாழ்ப்பாணக் கல்லூரி மாணவன் பிரபாகரன் பிரதீஸ் பெளதீக விஞ்ஞானத்தில் 3ஏ சித்தியைப் பெற்று ( இசற் புள்ளி- 2.3490) மாவட்ட மட்டத்தில் 8ஆவது நிலையையும் தேசிய ரீதியில் 77ஆவது நிலையையும் பெற்றார்.

அந்தப் பாடசாலையின் மாணவன் விக்டர் ஜெயக்குமார் வசந்த் கோட்ப்ரே பெளதீக விஞ்ஞானத்தில் 3ஏ சித்தியைப் பெற்று (இசற் புள்ளி – 2.1397) மாவட்ட மட்டத்தில் 21ஆவது இடத்தையும் தேசிய ரீதியில் 248ஆவது நிலையையும் பெற்றார்.

அந்தப் பாடசாலையின் மாணவி அஸ்வினி ஸ்கந்தராஜா வணிகப் பிரிவில் 3ஏ சித்தியைப் பெற்று ( இசற் புள்ளி – 1.7440) யாழ். மாவட்ட மட்டத்தில் 37ஆவது நிலையைப் பெற்றார்.

யாழ்ப்பாணக் கல்லூரி மாணவி அனோஜா சத்தியசீலன் வணிகப் பிரிவில் 3ஏ சித்தியைப் பெற்று (இசற் புள்ளி – 1.6976) மாவட்டத்தில் 45ஆவது நிலையைப் பெற்றார்.