• :
  • :
களத்தில்

மைத்திரிபால சிறிசேனவின் செயற்பாடு குறித்து சிவில் சமூகம் அதிர்ச்சி : கலாநிதி பாக்கியசோதி சரவணமுத்து

மைத்திரிபால சிறிசேனவின் செயற்பாடு குறித்து சிவில் சமூகம் அதிர்ச்சி : கலாநிதி பாக்கியசோதி சரவணமுத்து

புலம்பெயர் தமிழர்களுக்கு கொடூர அச்சுறுத்தல் விடுத்த லண்டனிலுள்ள இலங்கைத்தூதரக பாதுகாப்பு ஆலோசகர் பிரிகேடியர் பிரியங்க பெர்னாண்டோவை மீண்டும் பணியாற்ற அனுமதித்த ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் செயற்பாடு, பேரதிர்ச்சியாக அமைந்துள்ளதென மனித உரிமை செயற்பாட்டாளரும் மாற்றுக்கொள்கைகளுக்கான நிலையத்தின் நிறைவேற்றுப் பணிப்பாளருமான கலாநிதி பாக்கியசோதி சரவணமுத்து தெரிவித்தார்.

இலங்கை சுதந்திரத்தினத்தின் போது லண்டனிலுள்ள இலங்கைத்தூதரகத்தின் முன்பாக ஆர்ப்பாட்டம் செய்த புலம்பெயர் தமிழர்களை நோக்கி கழுத்தை அறுப்பதைப் போன்ற சைகையை, தூதரகத்தின் பாதுகாப்பு ஆலோசகராக செயற்படும் பிரிகேடியர் பிரியங்க பெர்னாண்டோ விடுத்திருந்தார். இதனை சமூக ஊடகத்தின் மூலமாக மனித உரிமை ஆர்வலர்கள், ஜனநாயக செயற்பாட்டாளர்கள் மற்றும் ஊடகவியலாளர்கள் கண்டித்து விமர்சித்ததையடுத்து பாதுகாப்பு ஆலோசகர் பதவியிலிருந்து பிரிகேடியர் பிரியங்க இடைநிறுத்தப்படுவதாக வெளிவிவகார அமைச்சு நேற்று விடுத்த அறிக்கையில் தெரிவித்திருந்தது.
 
எனினும், பிரிகேடியர் பிரியங்க லண்டனிலுள்ள இலங்கைத்தூதரகத்தில் பாதுகாப்பு ஆலோசகர் பணியை மீளப் பொறுப்பேற்பதற்கான அறிவுறுத்தல்களை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன வழங்கியுள்ளதாக இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் சுமித் அத்தபத்து இன்று காலை தெரிவித்திருந்தார்.
 
இதுதொடர்பில் கருத்துத் தெரிவித்த கலாநிதி பாக்கியசோதி சரவணமுத்து, ஜனாதிபதியின் செயற்பாடு அதிர்ச்சியளிப்பதாக தெரிவித்தார்.’படைவீரர்கள் என்பவர்கள் மிகுந்த பொறுப்புணர்வுடன் செயற்படக் கடமைப்பட்டுள்ளவர்கள். அந்தவகையில் ஆர்ப்பாட்டக்காரர்களை நோக்கி கழுத்தை அறுப்பதைப் போன்ற சைகையை வெளிப்படுத்தி கொலை அச்சுறுத்தல் விடுத்தமைக்காக, உடனடியாக பிரிகேடியர் பிரியங்க பெர்னாண்டோ பாதுகாப்பு ஆலோசகர் பதவியில் இருந்து இடைநிறுத்தப்பட்டு அவருக்கு எதிராக விசாரணைகளை முன்னெடுப்பது அவசியமாகும் என அவர் மேலும் சுட்டிக்காட்டினார்.