img/728x90.jpg
உழைத்தவர்களை வாழ்த்திடுவோம். வாரீர்! வெண்பொன் விழா - தமிழாலயம் பேர்லின்

உழைத்தவர்களை வாழ்த்திடுவோம். வாரீர்! வெண்பொன் விழா - தமிழாலயம் பேர்லின்

 மகத்தான உறுதிமிக்க தலைமையினால் முன்னெடுக்கப்பட்டு பல்லாயிரம் மாவீரர்களின் தியாகத்தால் விரிந்தெழுந்த ஒரு பெரும் விடுதலைப் போராட்டம் வெறுமனே நிலத்தை மீட்பது மட்டும் இல்லாமல் அந்த மக்களின் சமூக வாழ்வியல் பண்பாடு சிந்தனை உலகை எதிர்கொள்ளும் தர்க்கரீதியான புதிய பார்வை என்று பல தளங்களிலும் பலநூற்றாண்டு மாற்றத்தை ஓரிரு வருடங்களில் நிகழ்த்தி விடுகிறது.

 
அப்படியான ஒரு மாற்றம் புலம்பெயர் தேசங்களில் தமிழ்மொழி தமிழர்களின் கலை பற்றிய கல்வி சம்பந்தமாகவும் ஏற்பட்டது. இந்த மாற்றத்தின் ஒரே காரணி அங்கு நடந்த விடுதலைப்போராட்டமே அன்றி புலம்பெயர் தேசங்களில் இருந்த தனிநபர்கள் அல்ல.
 
விடுதலைப் போராட்டத்தின் தியாகங்களும் தலைமையின் நேர்த்தியான உறுதியான வழிகாட்டலும் அதனூடு எழுந்த பெரும் மக்கள் எழுச்சியுமே அனைத்து மாற்றங்களின் மூலம்.
 
வரலாறு என்பது பெரும் நதிபோன்றது அதன் இயங்குசக்தி தியாகமும் அர்ப்பணமும் செயற்பாடுமே.
 
தாய்மொழி பேசுவதற்காக மட்டுமல்ல 
எமது அடையாளமும் அதுவே!!!!
 
உழைத்தவர்களை வாழ்த்திடுவோம். வாரீர்!!! 
வெண்பொன் விழா 
15.04.2018
 
-தமிழாலயம் பேர்லின்-