• :
  • :
களத்தில்

ட்டு தமிழர்களை சித்திரவதை செய்து படுகொலை செய்த ஆறு சிறிலங்கா படையினரும் விடுவிப்பு!

ட்டு தமிழர்களை சித்திரவதை செய்து படுகொலை செய்த ஆறு சிறிலங்கா படையினரும் விடுவிப்பு!

எட்டு தமிழர்களை சித்திரவதை செய்து படுகொலை செய்த ஆறு சிறிலங்கா படையினரும் விடுவிப்பு!

 
எட்டு தமிழ்ப் பொதுமக்களை சித்திரவதை செய்து சுட்டுக்கொன்ற சம்பவத்துடன் தொடர்புடைய சிறிலங்கா காவல்துறை அதிகாரி ஒருவர் மற்றும் ஐந்து சிறிலங்கா பாதுகாப்பு படையினரை கடும் நிபந்தனை பிணையில் விடுக்குமாறு வடமத்திய மாகாண மேல் நீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது.
 
போர் நடைபெற்ற காலத்தில் திருகோணமலை, கந்தளாய் பாரதிபுரம் பகுதியில் நிராயுத பாணிகளான எட்டு தமிழ் பொதுமக்கள் சுட்டுக் கொல்லப்பட்டனர். இந்த படுகொலை சம்பவம் தொடர்பாக குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த பிரதான சிறிலங்கா காவல்துறை பரிசோதகர், சிறிலங்கா பாதுகாப்பு படையினர் உட்பட ஆறு பேரே இவ்வாறு பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.
 
வடமத்திய மாகாண மேல் நீதிமன்ற நீதிபதி மஹேஷ் வீரமன் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார்.சந்தேக நபர்களை தலா ஒரு லட்சம் ரூபா பெறுமதியான இரண்டு சரீரப் பிணைகளில் விடுவிக்குமாறு உத்தரவிட்ட நீதிபதி, பிரதி மாதந்தோறும் ஞாயிற்றுக் கிழமைகளில் குற்றப் புலனாய்வு திணைக்களத்தின் தலைமையகத்தில் ஆஜராக வேண்டும் எனவும் உத்தரவிட்டுள்ளார்.
 
கே.எம்.நிஹால் பிரேமசிறி, கோனோர, ஜீ.ஜீ.திஸ்ஸ பண்டார, ஆர்.எம். ரணராஜா பண்டார, யாகம லியனகே சோமரத்ன, ரி.எஸ்.எம்.மயூரசேன, ஆர்.ஆர்.செனரத் பண்டார மெதிவல ஆகிய சந்தேக நபர்களே இவ்வாறு பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.
 
மேலும் வழக்கில் குற்றம் சுமத்தப்பட்டிருந்த, 5 பொலிஸ் அதிகாரிகள் வழக்கில் இருந்து முற்றாக விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.
 
கடந்த 1998 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் முதலாம் திகதி அல்லது அதனை அண்மித்த நாள் ஒன்றில் கந்தளாய், பாரதிபுரம் பகுதியை சேர்ந்த எட்டு தமிழ் பொதுமக்களை பலவந்தமாக சிறை வைத்து, அவர்களை சித்திரவதை செய்து சுட்டுக்கொன்றமை உட்பட 37 குற்றச்சாட்டுக்களின் கீழ் சட்ட மா அதிபர் சந்தேக நபர்களுக்கு எதிராக குற்றப் பத்திரிகை தாக்கல் செய்துள்ளார்.
 
குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ள கே.கே. சந்திரசேன பண்டார என்ற பொலிஸ் அதிகாரி தொடர்ந்தும் நீதிமன்றத்தில் ஆஜராகாமல் புறக்கணித்து வருவதால், அவரை உடனடியாக கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்துமாறு உத்தரவிட்ட நீதிபதி, பகிரங்க பிடியாணையை பிறப்பித்துள்ளார்.
 
கடமைக்காக வழங்கப்பட்டிருந்த ரி.56 ரக துப்பாக்கி, எல்.எம்.ஜி துப்பாக்கி மற்றும் தானியங்கி கைத்துப்பாக்கி என்பவற்றை பயன்படுத்தி நிராயுத பாணிகளான பொன்னம்பலம் கனகசபை, அமிர்தலிங்கம் சுரேந்திரா, அமிர்தலிங்கம் கஜேந்திரா, ஆறுமுகம் சேகர், குணரத்னம் சிவராஜா, சுப்ரமணியம் சிவகரன், முருகேசு ஜனகன்,நாகன் பவளநாதன் ஆகிய தமிழ் பொதும்ககளை படுகொலை செய்தமைக்கு எதிராக சட்டமா அதிபர் இந்த வழக்கை தொடர்ந்துள்ளார்.