• :
  • :
களத்தில்

கர்ப்பிணித்தாய்மார்கள் மற்றும் பொது மக்கள் தெல்லிப்பழை வைத்திய சாலை முன்பாக கவனயீர்ப்பு போராட்டம்

கர்ப்பிணித்தாய்மார்கள் மற்றும் பொது மக்கள் தெல்லிப்பழை வைத்திய சாலை முன்பாக கவனயீர்ப்பு போராட்டம்

கர்ப்பிணித்தாய்மார்கள் மற்றும் பொது மக்கள் தெல்லிப்பழை வைத்திய சாலை முன்பாக கவனயீர்ப்பு போராட்டம்

 
தெல்லிப்பழை ஆதார வைத்திய சாலையில் குழந்தை வைத்திய நிபுணரை நியமிக்க கோரி பிரதேச கர்ப்பிணித்தாய்மார்கள் மற்றும் பொது மக்கள் இணைந்து வைத்திய சாலை முன்பாக கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றை தற்போது முன்னெடுத்து வருகின்றனர்.
 
தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலையில் அதிகமான கிராமங்களை சேர்ந்த மக்கள் சிகிச்சை பெற்று வருகின்றனர். எனினும் தெல்லிப்பளை வைத்திய சாலை ஆரம்பிக்கப்பட்திலிருந்து குழந்தை வைத்திய நிபுணர் நியமிக்கப்படவில்லை.
 
இந்த நிலையில் 10 இற்கும் மேற்பட்ட குழந்தைகள் இறந்துள்ளார்கள் இதனால் குழந்தைகளை இழந்த தாய்மார்கள் மன அழுத்தத்தினால் மனநலம் பாதிக்கப்பட்ட சம்பவங்களும் இடம்பெற்றுள்ளன. இந்த நிலையிலேயே மேற்படி போராட்டத்தை கர்ப்பிணித்தாய்மார்கள் இணைந்து முன்னெடுத்து வருகின்றனர்.