• :
  • :
களத்தில்

தமிழ் மக்களின் பிரச்சனை முடியவில்லை, தமிழர் தாயகத்தை விட்டுவிட முடியாது!

தமிழ் மக்களின் பிரச்சனை முடியவில்லை, தமிழர் தாயகத்தை விட்டுவிட முடியாது!

தமிழ் மக்களின் பிரச்சனை முடியவில்லை, தமிழர் தாயகத்தை விட்டுவிட முடியாது!

தந்தை செல்வாவின் கனவுகள் இன்னும் நிறைவேறவில்லை, தமிழர் அரசு இன்னமும் உருவாகவில்லை, தெற்கில் உள்ளவர்கள் எதிர்க்கிறார்கள் என்பதற்காக தமிழர் தாயகத்தை கைவிட்டு விட முடியாதென லங்கா நவசமவாய கட்சின் தலைவர் கலாநிதி விக்ரம்பாகு கருணாரட்ன தெரிவித்துள்ளார்.

தந்தை செல்வாவின் நினைவு தினம் இன்று காலை யாழ்.நகரில் அமைந்துள்ள தந்தை செல்வா நினைவு சதுக்கத்தில் நடைபெற்றது.

இந்த நிகழ்வில் நினைவு பேருரையற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

பண்டாரநாயக்க செல்வநாயகம் ஆகியோர் ஒன்றாக படித்தவர்கள். பண்டராநாயக்க 1962  இல் சமஷ்டி என்றார். பின்னர் சிங்கள அமைப்புக்கு தலைமை தாங்கிய பின்னர் அதனை மறந்து விட்டார். இது போன்று தான் இலங்கை அரசியலில் பௌத்தம் தாக்கம் செலுத்தி வருகின்றது.

தந்தை செல்வாவின் காலத்தில் தீர்வுக்கான வழிகள் சில காணப்பட்டன அதில் பண்டா -செல்வா, டட்லி- செல்வா ஒப்பந்தங்களை குறிப்பிடலாம் இதனை குழப்பியது இடது சாரிகளே. இவ்வாறு இடது சாரிகளும் வரலாற்றில் தவறிழைத்து விட்டார்கள்.

மகாத்மா காந்தி தனது மக்களுக்காக எவ்வாறு அமைதியான முறையில் போராடினாரோ, அதே போன்று தான் தன்னுடைய மக்களுக்காகவும் தந்தை செல்வா போராடினார். பல்லாயிரக்கணக்கான மக்கள் அவருக்கு பின்னால் நின்று போராடினார்கள்.

தமக்கு அடிபணிந்து ஏனையவர்கள் இருக்க வேண்டும் என்று தான் சிங்கள ஆட்சியாளர்கள் தொடர்ந்தும் விரும்புகின்றார்கள். அதனால் தான் சாத்வீக போராட்டங்களை கண்டு அஞ்சுகின்றார்கள்.

இன்றும் தமிழ் மக்களின் பிரச்சனை முடியவில்லை தமிழ் அரசு இன்னும் உருவாகவில்லை, தமிழர் தாயகத்தை விட்டுவிட முடியாது. இந்த அரசிற்கு நாம் அனைவரும் அழுத்தம் கொடுக்க வேண்டும். எதிர்காலத்தில் எமது பயணம் ஒன்றிணைந்து தொடர வேண்டும். தமிழ் மக்கள் அரசியல் அபிலாசைகளை பெறும் வரையில் பயணிப்போம் என்றார்.