• :
  • :
களத்தில்

சுவிஸ் நாட்டில் எழுச்சியுடன் நடைபெற்ற தொழிலாளர் தினம் 2018!

சுவிஸ் நாட்டில் எழுச்சியுடன் நடைபெற்ற தொழிலாளர் தினம் 2018!

சுவிஸ் நாட்டில் எழுச்சியுடன் நடைபெற்ற தொழிலாளர் தினம் 2018!

 
சர்வதேச தொழிலாளர் தினத்தில் உலகெங்கும் வாழும் தொழிலாளர் வர்க்கத்துடன் இணைந்து ஒடுக்கப்படும் தேசிய இனமான ஈழத் தமிழினமும் மே தினத்தை எழுச்சியுடன் கொண்டாடியது.
 
சுவிஸ் நாட்டின் வர்த்தகத் தலைநகரான சூரிச் மாநகரில் காலை 10:30 மணியளவில் ஊர்வலம் ஆரம்பமானது. சுவிஸ் நாட்டவரும் ஏனைய இனத்தவரும் கலந்து கொண்டனர்.
 
“தமிழீழ தேசியக்கொடியையும் தமிழீழ தேசியத்தலைவரின் படங்களையும் தாங்கியவாறு ஊர்வலத்தில் கலந்து கொண்டனர்”
 
சுவிஸ் வாழ் தமிழர்கள் சார்பில் சுவிஸ் தமிழர் ஒருங்கிணைப் புக்குளுவினர் தலைமையேற்று அழைப்புவிடுத்திருந்தனர் .இந்த எழுச்சிப் பேரணியில் நூற்றுக் கணக்கான சுவிஸ் வாழ் தமிழர்களும் கலந்து உணர்வுடன் தமது உரிமைக் கோசங்களை எழுப்பிச் சென்றனர்.மேதின பேரணிமுடிவிடத்தில் ஒரு ஒன்றுகூடல் நிகழ்வும் இடம்பெற்றது .அதில் தமிழீழ விடுதலைப்போரில் தமது இன்னுயிர்களை அர்ப்பணம் செய்த மக்களையும் போராளிகளை நினைவுகூர்ந்து ” வணக்க நிகழ்வு” இடம்பெற்றது .
 
இந்த சர்வதேச தொழிலாளர் தின பேரணிகளில் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த மக்கள் குழுக்களும் சுதந்திரத்தை வேண்டிநிற்கும் இயக்கங்களின் அதரவு அமைப்புக்களும் கலந்துகொண்டன .அவர்கள் தமது மொழிகளில் கோசங்களை எழுப்பியும் பதாதைகளைத் தாங்கியவாறும் ஊர்திகளில் கலைவடிவங்களை உருவகப்படுத்தியும் தத்தமது உணர்வுகளை பகிர்ந்துகொண்டனர் . குறிப்பாக குருதிஸ்தான் ,ஈரான் ,ஈராக், திபெத் , துருக்கி , சிரியா, சோமாலிய, எரித்திரியா போன்ற பல்வேறு தேசிய இனங்களைப்பிரதி நித்துவப்படுத்தும் மக்கள் கலந்துகொண்டனர்.