• :
  • :
களத்தில்

வல்வைப்படுகொலைகளின் 29ஆம் ஆண்டு நினைவுகள்!

வல்வைப்படுகொலைகளின் 29ஆம் ஆண்டு நினைவுகள்!

வல்வைப்படுகொலைகளின் 29ஆம் ஆண்டு நினைவுகள்……! 

 
பிரித்தானியப் படையினரால்  இந்தியாவில் மேற்மேற்கொள்ளப்பட்ட ஜாலியன் வாலாபாக்படுகொலை அமெரிக்க இராணுவத் தினரால் வியட்நாமில் மேற் கொள்ளப்பட்ட மைலாய் படுகொலை என்றவராலாற்றுப் புகழ்பெற்றுவிட்ட துயரம் நிறைந்த கொலைகளின் வரிசையில் இந்த வல்வெட்டித்துறைப் படுகொலையும் இன்று இடம்பெற்று விட்டது என்பதைஎவரும்எக்காலமும் மூடிமறைத்து விடமுடியாது.
 
1989 ஆம்ஆண்டுஆகஸ்ட்மாதம் 2ம், 3ம், 4ம், திகதிகளில் இந்தியப்படையினர் வல்வெட்டித்துறையில்நடாத்திய படுகொலைகள் இன்றும் கூடஎமது நெஞ்சைவிட்டு அகலாது இருக்கின்ற ஒரு துன்பியல்நிகழ்வாகும்.
 
இந்திய இராணுவத் தினரின் தாக்குதல்கள் ;முடிந்து அந்தப் பிரதேசத்தை விட்டு இராணுவம் முகாம்களுக்குத் திரும்பியபின் வல்வெட்டித்துறைக்குச் சென்று பார்த்தவர்களால் அங்கு நடைபெற்று முடிந்த கொடூரங்களை ஜீரணிக்க முடியவில்லை.இந்தப் படுnகொலைகளின் பொழுது,
 
• ஆண்,பெண்,முதியோர், குழந்தைகள் என்ற வேறுபாடுஇன்றி  அங்குமிங்குமாக 71 பொதுமக்கள், சுட்டும் ,வெட்டியும், எரித்தும் கொல்லப்பட்டிருந்தனர். இதில் பலர் நிலத்தில் முகங் குப்பறப் படுக்கவைக்கப்பட்ட  நிலையில் முதுகில் சுடப்பட்டிருந்தனர்.
நூற்றுக்கும்மேற்பட்டபொதுமக்கள்காயமடைந்திருந்தனர். 
 
123வீடுகள்முற்றாகஎரிக்கப்பட்டுநாசமாக்கப்பட்டன. 45 கடைகள்சூறையாடப்பட்டுதீயிடப்பட்டன.
 
வல்வைசனசமூகநிலையம்மற்றும்பொதுநூலகம், பாடசாலைகள் என்பன தீயிடப்பட்டன, பலஆயிரக்கணக்கான நூல்கள். தளபாடங்கள் கொழுத்தப்பட்டிருந்ததுடன்நூலகத்தில்இருந்தகாந்தி,நேரு,நேதாஜி, இந்திராகாந்தி போன்ற இந்தியத் தலைவர்களின் படங்கள்  கூட நொருக்கப்பட்டு தீயிடப்பட்டு இருந்தன.
 
176 மீன்பிடிவள்ளங்கள்எரிக்கப்பட்டன.
 
• வல்வெட்டித்துறை சிவன் கோயில்இவல்வை முத்துமாரி அம்மன் கோயில் கப்பலுடையவர் கோயில்,ஆதிகோயில், உட்பட பத்துக்கு மேற்பட்ட வணக்க ஸதலங்கள் எரியூட்டப்பட்டன.
 
 1989 ஆம் ஆண்டு ஆகஸ்ற் 2ஆம், 3ஆம், 4 ஆம் திகதிகளில் படுகொலை செய்யப்பட்டுத் தாயகத்தின் விடிவுக்காய்த் தமதுயிரை நீத்தமக்களை இன்று உலகமே நினைவு கூர்ந்து கொண்டிருக்கின்றது……!
 
இன்று வல்வைப் படுகொலையின் 29ஆவது ஆண்டு நிறைவு  இலண்டனிலும் வல்வெட்டித்துறையிலும்  நினைவு கூரப்படுகின்ற இந்தப் படுகொலைகளின் பொழுது உயிர்நீத்த 71 பொதுமக்களுக்கும் எமது அஞ்சலியைத் தெரிவித்துக் கொள்கின்றோம்……!





பெண்ணே!!
பெண்ணே!!
வறட்சி
வறட்சி