• :
  • :
களத்தில்

வந்தாறுமூலை படுகொலை நினைவு நாள்

வந்தாறுமூலை படுகொலை நினைவு நாள்

இன்று வந்தாறுமூலை படுகொலை நினைவு நாள்.

முஸ்லிம் காடையர்கள் மற்றும் முஸ்லிம் ஊர்காவல் படையின் துணையுடன் இன அழிப்பு அரசின் படையினர் நூற்றுக்கணக்கான தமிழ் மக்களை படுகொலை செய்தார்கள்.
 
 
இரண்டு நாட்களுக்கு முன்பு "இனச்சுத்திகரிப்பு" என்ற தலைப்பில் யாழிலிருந்து முஸ்லிம்கள் வெளியேற்றப்பட்டதையொட்டி நாடு தழுவிய ரீதியில் கட்டுரை போட்டி நடத்துவதாக ஒரு அறிவிப்பை பார்க்க நேரிட்டது.
 
அதில் இந்த வந்தாறுமூலைப் படுகொலையை யார் கணக்கில் வைப்பிலிடுவது என்பதை போட்டி நடத்துபவர்கள் தெரிவித்தால் நமக்கு உதவியாக இருக்கும்.
 
கூடவே பாலமுனை, பாணமை, மீனோடைக்கட்டு, ஒலுவில், நிந்தவூலீ, சம்மாந்துறை, கரவாகு, தீகவாவி, மாந்தோட்டம், கொண்டா வெட்டுவான், பூரணி, செம்மணிக்குளம், தங்கவேலாயுதபுரம், உடும்பன்குளம் போன்ற பாரம்பரிய தமிழ் கிராமங்கள் எங்கே? என்றும் அவை எப்படி முஸ்லிம் கிராமங்களாக மாறின? என்றும் அட்டைப்பள்ளம், சவளக்கடை, திறாய்க்கேணி, சொறிக்கல்முனை, மீராச்சோலை போன்ற கிராமங்களில் தற்போது முஸ்லிம்கள் என்ன செய்து கொண்டிருக்கிறார்கள்? என்பதையும் விரைவில் வாழைச் சேனை, செங்கலடி ஆரையம்பதி, நீலாவனை, பாண்டிருப்பு போன்ற தமிழர் தொன்ம நிலங்களில் என்ன உத்தேச நோக்கத்துடன் ஆக்கிரமிக்க தொடங்கியுள்ளீர்கள்? என்பதையும் தெளிவு படுத்திவிட்டு "இனச்சுத்திகரிப்பு" போட்டி நடத்தினால் நாமும் கலந்து கொண்டு எழுதித் தள்ளலாம்.
 
ஒரு இனத்தைச் சேர்ந்த பல்லாயிரக்கணக்கானோரை பகுதி பகுதியாக படுகொலை செய்துவிட்டு அவர்கள் கிராமங்களை கையகப்படுத்தி வணக்கதலங்களை இறைச்சி கடைகளாகவும், பண்பாட்டு அடையாள மையங்களை பள்ளிவாசல்களாகவும் மாற்றி அந்த இனம் வாழ்ந்த சுவடே இல்லாமல் மாற்றியமைப்பது இனச்சுத்திகரிப்பா? அல்லது எந்த வித உயிர்சேதமுமின்றி , அந்த இனக் குழுமத்தின் பண்பாட்டு, வணக்கத்தலங்களை பாதுகாத்து தற்காலிகமாக ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு வெளியேற்றுவது இனச்சுத்திகரிப்பா?
 
கொடுத்த வாக்குறுதிப்படி சொன்ன சொல் மாறாமல் புரிந்துணர்வு உடன்படிக்கையின் பின் புலிகள் ரவூப் ஹக்கீம் உடன் ஒப்பந்தம் எழுதி முஸ்லிம்களை மீள் குடியேற அனுமதித்தார்கள்.
 
இது வரலாறு... இதில் எங்கே இனச் சுத்திகரிப்பு?
 
அது சரி தென் தமிழீழத்தில் ஆக்கிரமித்த தமிழ் கிராமங்களை தமிழர்களிடம் மீளக் கையளித்து விட்டு முஸ்லிம்கள் நீங்கள் எப்போது வெளியேறப் போகிறீர்கள்?
 
அதுவரை அது இனச் சுத்திகரிப்புத்தான் - அதுதான் இனச் சுத்திகரிப்பின் தியரி கூட..
 
- பரணி கிருஷ்ணராஜனி -

பெண்ணே!!
பெண்ணே!!
வறட்சி
வறட்சி