• :
  • :
களத்தில்

தமிழர் தேசத்தை சிங்கள பேரினவாத பூதம் ஆக்கிரமித்த கரி நாள் மே 18!

தமிழர் தேசத்தை சிங்கள பேரினவாத பூதம் ஆக்கிரமித்த கரி நாள் மே 18!

தமிழர் தேசத்தை சிங்கள பேரினவாத பூதம் ஆக்கிரமித்த கரி நாள் மே 18!


 
தமிழர் தேசத்தை சிங்கள பேரினவாத பூதம் ஆக்கிரமித்த கரி நாள் மே 18 ஆகும் எனவே இந்த நாளை தமிழர்தேசத்தின் தேசிய இனவழிப்பு நாளாக வடக்கு கிழக்கில் வர்த்தக நிலையங்களையும் பூரண கடையடைப்புச் செய்து இல்லங்கள் பாடசாலைகள் அரச திணைக்களங்கள் மற்றும் பொது இடங்களில் கறுப்புக் கொடியை தொங்கவிட்டு துக்க நாளாக அனுஷ்டிக்குமாறு தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் மட்டு மாவட்ட அமைப்பாளர் தர்மலிங்கம் சுரேஷ்; அழைப்பு விடுத்துள்ளார்.
 
முள்ளிவாய்கால் இனவழிப்பு மே 18 ம் திகதியை முன்னிட்டு தமிழ் தேசிய மக்கள் முன்னணி மட்டு மாவட்ட அமைப்பாளர் தர்மலிங்கம் சுரேஷ்; அந்த நாளை துக்க நாளாக அனுஷ்டிக்குமாறு அழைப்பு விடுத்து ஊடக அறிக்கை ஒன்றை இன்று ஞாயிற்றுக்கிழமை ( 13) விடுத்துள்ளது
 
தமிழின அழிப்பின் 09ம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வுகள் தமிழர் தாயகமெங்கும் மற்றும் புலம்பெயர் நாடுகளிலும் அனுஷ்டிப்பதற்குரிய ஏற்பாடுகள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது.
 
ஒரு பெரும் இனவழிப்பின் ஊடாக தமிழர் தேசத்தை சிங்கள பேரினவாத பூதம் ஆக்கிரமித்த கரி நாள் மே 18 ஆகும். மானிட மனிதநேயம் குழி தோண்டி புதைக்கப்பட்ட இந்நாளை தமிழர்தேசத்தின் தேசிய இனவழிப்பு நாளாக அனுஸ்டிக்குமாறு அனைத்து தமிழ் உறவுகளையும் வேண்டிநிற்கின்றோம்.
 
எனவே அன்றைய தினம் வட கிழக்கிலுள்ள அனைத்து வர்த்தக நிலையங்களையும் பூரணகடையடைப்புச் செய்து இல்லங்களிலும் பாடசாலைகள் திணைக்களங்கiளிலும் மற்றும் பொது இடங்களிலும் கறுப்புக் கொடிகளை தொங்கவிட்டும் துக்க நாளாக அனுஷ்;;டிக்குமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
 
இறுதியுத்தத்தின்போது எமது மக்கள் வகைகொகையின்றி வயதுவேறுபாடின்றி உயிருடன் புதைக்கப்பட்டும் சொல்லமுடியாத சித்திரவதைகளுக்கும் வன்புணர்வுக்கும் உள்ளாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்டார்கள். மனித குலமே அதிர்ந்துபோன மிகக்கொடுமையான துன்பங்களையும் துயரங்களையும் சந்தித்தே மாண்டார்கள்.
 
உலகிலே எங்குமே நடக்காத இராணுவத்தின் அத்தனை கோரத்தாண்டவங்களும் நடந்தேறிய நாளே தாய்ப்பிணத்தின் பால் அருந்திய பிஞ்சுகளின் துயரத்தை தந்த நாள். சர்வதேசம் கண்ணை மூடிக் கொண்டிருந்த இந்த நாள் தமிழருக்கு, தமிழ்த்தேசம் தான் பாதுகாப்பையும் சுயகௌரவத்தையும் கொடுக்கும் என நிரூபித்த நாள், ஒவ்வொரு இனப்படுகொலையின் பின்பே நீதி பிறப்பெடுத்தது உலக வரலாறு.
 
நாசிகளால் மேற்கொள்ளப்பட்ட ‘இனப்படுகொலை’ யூதர்களுக்கு தன் தேசத்தைப் பெற்றுக்கொடுத்தது பாலஸ்தீன மக்களும் எம்மக்களைப் போன்று தொடர்ச்சியாக அடக்குமுறைக்கு உள்ளாக்கப்பட்டு வருகின்றனர். அவர்களின் விடுதலைக்குரிய காலமும் கனிந்திருக்கிறது.
 
எமது இனத்தின்மீது மேற்கொள்ளப்பட்ட தொடர்ச்சியான அடக்குமுறைகளும் இனப்படுகொலைகளுமே எம்மக்களை போராடவைத்தது. ‘முள்ளிவாய்க்கால் பேரவலம்’ எம்மினத்திற்கு கிடைத்த விடுதலைவாசல் இந்நாளை எமது தாயக தேசத்தின் இனவழிப்பு நாளாக பிரகடனப்படுத்தி துக்க நாளாக அனுஷ;டிக்க வேண்டியது ஒவ்வொரு தன்மானத் தமிழனின் கடமையாகும். என அந்த அறிக்கையில் குறிப்பிடபட்டுள்ளது

அலசல்
அலசல்