• :
  • :
களத்தில்

கனடியத் தமிழர் தேசிய அவையின் (NCCT) கனடிய வெளிவிவகார அமைச்சருடனான (Hon. Chrystia Freeland) சந்திப்பு!

கனடியத் தமிழர் தேசிய அவையின் (NCCT) கனடிய வெளிவிவகார அமைச்சருடனான (Hon. Chrystia Freeland) சந்திப்பு!

கனடியத் தமிழர் தேசிய அவையின் (NCCT) கனடிய வெளிவிவகார அமைச்சருடனான (Hon. Chrystia Freeland) சந்திப்பு!

தற்போதய எமது கனடிய வெளிவிவகார அமைச்சருடனான தமிழர் தரப்பின் முதலாவது உத்தியோகபூர்வ சந்திப்பு ஜுன் 25ம் திகதி மதியம் 12 மணியளவில் கனடிய வெளிவிவகார அமைச்சின் அழைப்பின் பெயரில் டொரண்டொவில் இடம் பெற்றது. கனடியத் தமிழர் தேசிய அவை மற்றும் சில தமிழ் அமைப்புக்களும், பாராளுமன்ற உறுப்பினர் கரி ஆனந்தசங்கரி (MP Gary Anandasangaree) அவர்களும் இக் கூட்டதில் கலந்து கொண்டனர்.
 
கனடிய தமிழர் தேசிய அவை சார்பில் கலந்து கொண்ட பிரதிநிதிகள் இக்கூட்டத்தில் கீழ் வரும் கருத்துக்களை வலியுறுத்தினர்:
 
1. ஈழத்தமிழருக்கான அரசியல் தீர்வு என்பது ஈழத் தமிழர்கள் ஒரு தேசிய இனம் என்பதனையும், அவர்களுக்கான சுயநிர்ணயஉரிமைக்கு உரித்துடையவர்கள் என்பதனையும், அவர்கள் இன அழிப்பிற்கு உட்பட்ட தேசிய இனம் என்பதனையும் அங்கீகரிக்கப்பட்ட அடிப்படையில் அமையவேண்டும் என்று கனடியத் தமிழர் தேசிய அவையால் வலியுறுத்தப்பட்டது:
 
ஐக்கிய நாடுகள் மனித உரிமை சபையின் தீர்மானத்திலும், இலங்கை அரசின் புதிய யாப்பு உருவாக்கத்திலும் ஈழத் தமிழருக்கான அரசியல் தீர்வு திட்டத்தில் தமிழ்த் தேசியத்தின் அடிப்படைகள் இல்லாத தீர்வு பரிந்துரைக்கப்படும் இடத்து, கனடியத் தமிழர் தேசிய அவையானது கனடாவிலும் மற்றய நாடுகளிலும் ஈழத்தமிழர்களுடைய தாயகம், தேசியம், தன்னாட்சி என்னும் அடிப்படை கோட்பாடுகளை விட்டுக்கொடுக்காமல் தொடர்ச்சியான வேலைத்திட்டங்களில் ஈடுபட்டு வருகின்றது.
 
2. விசேட அனைத்துலக குற்றவியல் நீதி மன்றம் அல்லது அனைத்துலக குற்றவியல் நீதி மன்றத்திற்கு இலங்கை அரசை கொண்டு செல்ல வேண்டும் என கனடியத் தமிழர் தேசிய அவையால் முன் வைக்கப்பட்டது:
 
ஐக்கிய நாடுகள் சபையில் கொண்டு வரப்பட்ட தீர்மானத்தில் கலப்பு நீதிமன்றத்தை அமைக்கவேண்டும் என்றும், அதில் பொது நலவாய நாடுகளின் நீதிபதிகள் உள்ளடக்கப்பட வேண்டும் என்று கேட்கப்பட்டிருந்தாலும்; இத் தீர்மானத்தை இலங்கை அரசாங்கம் ஏற்றுக் கொண்டாலும், இதுவரை இலங்கை அரசு எவ்வித முன்னேற்றத்தையும் காட்டவில்லை. இலங்கையின் ஜனாதிபதி மற்றும் பிரதம மந்திரி தொடர்ச்சியாக தமது இராணுவ வீரர்களை நீதி மன்றத்திற்கு கொண்டுவர மாட்டோம் என்று உறுதியாக கூறிவரும் நிலையில், இலங்கை அரசு தொடர்ச்சியாக இழைக்கும் தமிழர் மீதான இன அழிப்பை விசாரணைக்கு உட்படுத்த இலங்கை அரசுக்கு அப்பாற்பட்ட பொறிமுறைக்கு பரிந்துரைக்க கனடா உதவ வேண்டும் என கனடிய தமிழர் தேசிய அவையால் இச் சந்திப்பில் முன்வைக்கப்பட்டது.
 
3. இலங்கை அரசு மீதான அழுத்தத்தை அதிகரிக்கு முகமாக பொருளாதாரத் தடை மற்றும் பயணத்தடை விதிக்க வேண்டும் என கனடிய தமிழர் தேசிய அவையால் வலியுறுத்தப்பட்டது:
 
மாறி மாறி வருகின்ற இலங்கை அரசாங்கங்கள் தமிழர்களையும், உலக நாடுகளையும் தொடர்ச்சியாக ஏமாற்றி தமது பௌத்த சிங்கள ஏகாதிபத்திய கொள்கைகளை அமுல்படுத்தி, தமிழ்த் தேசிய இனத்தை முற்று முழதாக அழிப்பதற்கு பல வழிகளிலும் தொடர்ச்சியாக முயன்று வருகின்றனர். தமிழீழ விடுதலைப்புலிகளின் மிகப் பலமான ஆயுதப் போராட்ட காலமானது தமிழ் மக்களுக்கான அரணாக, இலங்கை அரசுக்கு எதிரான மிகப் பெரிய அழத்தமாக அமைந்தது. ஆயுதப் போராட்டம் மௌனிக்கப்பட்டதன் பின் ஈழத்திலும் புலத்திலும் தமிழர்கள் பல வழிகளிலும் அழுத்தங்களைப் பிரயொகித்து வருகின்றார்கள். கனடா உட்பட அனைத்துலகத்தினுடைய அழுத்தங்களும் இணைந்து தமிழர்களுக்கான தீர்வைப் பெற்றுக் கொடுக்கமுடியும் என கனடிய தமிழர் தேசிய அவை கனடிய வெளிவிவகார அமைச்சரைக் கேட்டுக் கொண்டனர்.
 
4. மேலதிகமாக பாதிக்கப்பட்ட மக்கள் சார்பாகவும் பல கருத்துக்கள் கனடியத் தமிழர் தேசிய அவை சார்பாக கலந்து கொண்ட பிரதி நிதிகளால் முன் வைக்கப்பட்டது. குறிப்பாக பாதிக்கப்பட்ட மக்களின் புனர்வாழ்வுக்கு சர்வதேச நிதியம் ஒன்றை கனடாவும் மேற்குலக நேச நாடுகளும் இணைந்து ஆரம்பிக்க வேண்டுமென கோரிக்கை விடப்பட்டது.
 
இதில் கலந்து கொண்ட மற்றய அமைப்புக்கள் காணாமல் ஆக்கப்பட்டவர்கள், பொறுப்புக் கூறல், மற்றும் பொருளாதார அபிவிருத்தி விடயங்களில் தமது கவனத்தை செலுத்தியிருந்ததை அவதானிக்க கூடியதாக இருந்தது.
 
தொடர்புகளுக்கு: கனடிய தமிழர் தேசிய அவை (NCCT)
தொலைபேசி: 416.830.7703
மின்னஞ்சல்: info@ncctcanada.ca
 
பிற்குறிப்பு: இக் கூட்டம் சம்பந்தமான விடயங்கள் சில தளங்களில் திரிவு படுத்தப்பட்டு தமிழ் மக்களை குழப்பும் விதமாக எழப்பப்பட்டு வருகின்றது. இவ் அறிக்கையினூடாக எமது நிலைப்பட்டை தமிழ் மக்களுக்கும். ஊடகங்களுக்கும் தொரியப் படுத்துகின்றோம்.


அலசல்
அலசல்