img/728x90.jpg
மக்களோடு இணைந்து பணியாற்ற வேண்டிய பல ஊடகங்கள்

மக்களோடு இணைந்து பணியாற்ற வேண்டிய பல ஊடகங்கள்

 மக்களோடு இணைந்து பணியாற்ற வேண்டிய பல ஊடகங்கள்- சமூக  வலைத்தளங்கள், ஒடுக்குமுறையாளர்களின் தரகர்களாக மாறிவரும் துயரச்சூழலில்,
ஈழத்தமிழ்த் தேசிய இனத்தின் விடுதலைக்குரலாக, அரசியல் களமாக,
  'களத்தில்' என்கிற இணையவழி ஊடகம் வெளிவருவது குறித்து பெருமகிழ்ச்சி கொள்கிறேன்.

நாமெல்லோரும் எம் தேச விடுதலை நோக்கிய பாதையில் ஒன்றிணைந்து பயணிக்க வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தும் அதேவேளை, பிராந்திய-பூகோள அரசியல் நகர்வுகள் குறித்த தெளிவூட்டலை , அரசியல் விவாதங்களை தாங்கிவரும் கனதியான களமாக,  'களத்தில்' இருக்குமென்கிற நம்பிக்கை எனக்குண்டு.

மக்களை, கருத்தியல் தளத்தில் அரசியல்மயப்படுத்தும் சீரிய பணியை, ' களத்தில்' முன்னெடுக்க வேண்டும்.

வல்லான் சொல்வதே ' வேதவாக்கு' என்கிற இழிநிலை மாற வேண்டும்.

தமிழ்த்தேசிய இனத்தின் சுயநிர்ணய உரிமை முழக்கத்தினை விட்டுக்கொடாமல், இறுதிவரை தீரத்துடன் போராடி மரணித்த அனைத்து மாவீரர்களின் ஈகங்களை நெஞ்சில் இருத்தி,
இந்த ' களத்தில்' இணையம் பயணிக்க வேண்டும்.

' பாதையைத் தேடாதே...
 உருவாக்கு.'

- இதயச்சந்திரன்
(அரசியல் விமர்சகர்)