தண்ணீரில் கண்ணீரோடு நிற்கும் எம் தேசமக்களுக்கு உதவிடுவோம்...!

தண்ணீரில் கண்ணீரோடு நிற்கும் எம் தேசமக்களுக்கு உதவிடுவோம்...!

அன்பான பிரான்சு வாழ் தமிழீழ மக்களே! 23.12.2018.

 “ இயற்கையின் கோரத்தில் பரிதவித்து நிற்கும் எம் மக்களின் துயர் தீர்ப்போம்.’’

 “ தண்ணீரில் கண்ணீரோடு நிற்கும் எம் தேசமக்களுக்கு உதவிடுவோம் ’’

 இயற்கை செய்த கோரத்தால் கடந்த 21ம் திகதி முதல் பெய்துவரும் பெரு மழையில் 70 ஆயிரத்திற்கும் அதிகமான

 எம்தேசமக்கள் சொல்லொண்ணாத் துயரத்தில் நின்று கொண்டிருக்கின்றார்கள்.      முல்லைத்தீவு, கிளிநொச்சி முதல்

 ஏனைய வன்னிப்பிரதேசம் எங்கும் குளங்கள் தண்ணீர் மேவியதால் அவற்றைத் துறந்து விட வேண்டிய நிலை

 ஏற்பட்ட தும் அதனால் தமது வாழ்விடங்களில் வாழ முடியாத நிலையில் தற்காலிக இடங்களில் உணவுகள்,

 மருந்துகள், மாற்று உடைகள் இன்றி எம்மவர்கள் செய்வதறியாது தவித்து நிற்கின்றனர்.

 இவர்களுக்கு உதவ வேண்டிய அரசே பாதிக்கப்பட்டது தமிழர் பிரதேசம் என்பதால் அவசர உதவிகளை செய்யாது

 காலதாமதம் செய்து கொண்டு சர்வதேசத்தின் தலையீடு ஏற்பட்டு விடும் என்பதால் சிறீலங்கா சனாதிபதி

 பாதிக்கப்பட்ட தமிழர் பிரதேசங்களுக்கு உடனடி உதவியை மேற்கொள்ளுமாறு உத்தரவிட்டுள்ளதாகச் செய்திகள்

 வெளிவந்தபோதும் எதுவுமே அங்கு கிடைக்காது பாதிகப்பட்ட எமது மக்களுக்கு உதவிட , எமது மகக்களே தமது முடிந்த

 பங்களிப்புக்களைச் செய்து வருகின்றனர். எனினும் புலம் பெயர்ந்து வாழும் எமது மனிதநேய அமைப்புக்கள்

 செய்கின்ற உதவிகள் பாதிக்கப்பட்ட எமது மக்களுக்கு சற்று ஆறுதல்களைக் கொடுத்துள்ள நிலையில் பிரான்சு

 மண்ணிலே வாழும் எமது மக்களின் உடனடி உதவியாக 23.12.2018 அன்று எமது கட்டமைப்புகளினதும்,

 மனிதநேயம் கொண்டவர்கள் செய்த பங்களிப்பான ஒரு பகுதி பணம் தாயகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

 இதற்கு மேலான உதவியை நாம் அவர்களுக்கு செய்ய வேணடி யிருப்பதால் மனிதநேயம் கொண்ட எமது மக்களின்

 உதவியை அவசரமாக நாம் எதிர்பார்த்து நிற்கின்றோம். உங்கள் உதவியை பின்வரும் தொலைபேசி

 இலக்கங்களுடன் தொடர்பு கொண்டோ அல்லது தமிழ்சங்கங்களுடன், தமிழ்ச்சங்கக் கூட்டமைப்புடன் தொடர்பு

 கொண்டு உதவியை செய்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

 நன்றி!

 தொடர்புகளுக்கு : 

 06 62 84 66 06 ( பாலன் ) - 06 20 54 66 36 ( செல்வா )

 மேலதிக தொடர்புகளுக்கு :

 தமிழர் ஒருங்கிணைப்புக்குழு - பிரான்சு

 01 43 15 04 21