• :
  • :
களத்தில்

தமிழினத்தின் மேலான சர்வதேச அநீதிக்கு எதிராக குரல்கொடுப்போம் - பிரித்தானியா

தமிழினத்தின் மேலான  சர்வதேச அநீதிக்கு எதிராக குரல்கொடுப்போம் - பிரித்தானியா

தமிழினத்தின் மேலான  சர்வதேச அநீதிக்கு எதிராக குரல்கொடுப்போம் - பிரித்தானியா

04 Feb 2018 அன்று அமைதிவழிப்போராட்டத்தில் ஈடுபட்ட தமிழர்கள் மற்றும் பிரித்தானிய பிரஜைகளுக்கு சைகை மூலம் கொலை மிரட்டல் விடுத்த Brigadier Priyanka Fernandoவை பிரித்தானிய பொலீஸ் கைது செய்ய தவறியது. எனினும் International Centre for Prevention and Prosecution of Genocide (ICPPG) அமைப்பால் முன்னேடுக்கப்பட்ட வழக்கில் அவர் குற்றவாளி என்று Westminster நீதிமன்றம் தீர்ப்பு வழங்கி, அவரை கைது செய்ய பிடியாணையும் வழங்கியிருந்தது.

ஆனால், இலங்கை அரசு கொடுத்த அழுத்தத்தின் அடிப்படையில், FCO ஊடாக சட்டத்துக்கு முரணாக இந்த விடயத்தில் தலையீடு செய்யப்பட்டு இந்த பிடியாணை இரத்து செய்யப்பட்டுள்ளது. இது பிரித்தானிய நீதிதுறையின் நடுநிலைமையை கேள்விக்குறியாக்கி உள்ளது.

இதை எதிர்த்து ICPPG மீண்டும் வழக்கு தொடர உள்ளது. இந்த வழக்கிற்கு எமது ஆதரவை காட்டும் முகமாக, நீதிமன்றத்திற்கு வெளியில் ஒரு அமைதிப்போராட்டம் நடைபெற ஒழுங்கு செய்யப்படட்டுள்ளது.

பிரித்தானிய நீதித்துறையில் அரசியல் தலையீட்டை எதிர்ப்போம்!

திகதி : வெள்ளிக் கிழமை 01/02/2019

நேரம் : 9AM to 12pm

இடம் : In Front of

Westminster Magistrates' Court

181 Marylebone Road,

London, NW1 5BR. UK

Nearest station: Edgware Road/Marylebone Station

அனைவரையும் அன்புடனும் உரிமையுடனும் அழைக்கின்றனர்.

தமிழர் ஒருங்கிணைப்புக் குழு,

தமிழ் இளையோர் அமைப்பு       

பிரித்தானியா

02033719313, 07496108923

www.tccuk.org, 

www.tyouk.org

அலசல்
அலசல்