• :
  • :
களத்தில்

மீண்டெழும் நிலை எமக்குள் உண்டே - நாமும் அக்கினிப் பறவை தான்!

மீண்டெழும் நிலை எமக்குள் உண்டே - நாமும் அக்கினிப் பறவை தான்!

மீண்டெழும் நிலை எமக்குள் உண்டே - நாமும் அக்கினிப் பறவை தான்!

தாரகை சிரிக்கும் வான் மீது

தண்ணொளி சிந்த வா நிலவே

விண்ணது அதிர விரமுழக்கம்

கண்ணது பறிக்கும் மின்னலும் வியக்க….

 

விழி உயர்த்தும் சிந்தை காண்

விடைபகரும் சிறப்பு பேண்

தடைக் கற்கள் மண்ணில் உண்டு

தடையகற்றி வெளியே வா பெண்ணே…

 

விரல்கள் வரையும் வீர காவியம்

விழிப்புநல்கும் எழுச்சி ஓவியம்

வரும் பகை வெல்லும் தந்திரம்

வாழ்வே படைத்தது உனக்கான சரித்திரம் …

 

மாதர் பிறப்பு மகத்தென அறி

நாத வடிவே நின் இயல்பென குறி

பூதலம் வியக்க. ஆக்கும் நெறி

புவனம் விழிக்கட்டும் ஒளியெனத் தெறி….

 

பங்குனி எட்டு பாரும் நோக்க

படைபலம் தாங்கி ஈழத்து பெண்கள்

களங்கள்கண்டு காவியம் படைத்த

கதைகளை நம் தலை முறைக்கு கூறு…

 

படைப்பின் சக்தி பார் நோக்கும் சித்தி

பாரதி அன்று எழுச்சி ஊட்டிய சேதி

கரிகால அண்ணன் வழி நடத்திய பாணி

காலத்தால்அழியாத வீரப்பெண்ணாம் மாலதி…

 

உலகம் எங்கும் வாழும் பெண்கள்

உள்ளம் ஏற்ற வேண்டிய தருணம்

பெண்கள் இழிவு நிலை அகற்றி

பெண்ணே தலை நிமிரும் நிலை காண்போம்…

 

நீதிமறந்த மனிதர் தாம்

எம் தேசமகளிர் சுகம் அழித்த போதும்

மீண்டெழும் நிலை எமக்குள் உண்டே

நாமும் அக்கினிப் பறவை தான் அறியும் மண்ணும் …..

 

-சிவதர்சினி ராகவன்-

அலசல்
அலசல்