• :
  • :
களத்தில்

சத்தியமூர்த்தி போன்ற ஊடகவியலாளர்களின் பணி இன்னும் இட்டுநிரப்பப்படவில்லை - திரு.மேத்தா!

சத்தியமூர்த்தி போன்ற ஊடகவியலாளர்களின் பணி இன்னும் இட்டுநிரப்பப்படவில்லை - திரு.மேத்தா!

சத்தியமூர்த்தி போன்ற ஊடகவியலாளர்களின் பணி இன்னும் இட்டுநிரப்பப்படவில்லை - திரு.மேத்தா!

இன்று பல நவீன ஊடகங்கள் வளர்ந்துள்ளபோதும், சத்தியமூர்த்தி போன்ற ஊடகவியலாளர்களின் பணி இன்னும் இட்டுநிரப்பப்படவில்லை என கடந்த 09.03.2019 சனிக்கிழமை பிரான்சு ஊடகமையத்தின் ஏற்பாட்டில் இடம்பெற்ற ஊடகவியலாளர் நாட்டுப்பற்றாளர் சத்தியமூர்த்தி அவர்களின் 10 ஆம் ஆண்டு நிறைவையொட்டிய நினைவுகளுடன் பேசுதல் நூல் அறிமுகநிகழ்வில் நூல் அறிமுகஉரையாற்றிய பிரான்சு தமிழர் ஒருங்கிணைப்புக்குழு பரப்புரைப் பொறுப்பாளர் திரு. மேத்தா அவர்கள் தெரிவித்திருநதார்.

அவர்தொடர்ந்து தெரிவிக்கையில், எமது இனம் பாதிக்கப்பட்டுக்கொண்டிருக்கும் போது, ஓர் இனம் அழிக்கப்பட்டுக்கொண்டிருக்கையில் தமிழ்ப் பத்திரிகைகள் வழிதவறி, தன்னுடைய இனத்திற்கு தாங்கள் செய்யவேண்டிய பணியைச் செய்யாது, பொதுவாக இருக்கின்ற நிலையை நாங்கள் பத்திரிகைகளில் காண்கின்றோம்.

அதையெல்லாம் துடைத்தெறிந்து உண்மைக்காகவும் நீதிக்காகவும் நேர்மைக்காகவும் நிற்கும் பத்திரிகைகள் என்ற வகையிலே ஈழமுரசு என்ற பத்திரிகை இன்று எத்தனையோ துன்பங்களையும் துயரங்களையும் நெருக்கடிகளையும் தடைகளையும் அச்சுறுத்தல்களையும் தாங்கி வெளிவந்துகொண்டிருக்கின்றது என்றால் அதற்கு நாட்டுப்பற்றாளர் சத்தியமூர்த்தி அவர்களுடைய பங்கும் நிறையவே இருக்கின்றது என்றார்.

அலசல்
அலசல்