img/728x90.jpg
தமிழகத் தலைவர்கள் எவராலும் புரிந்து கொள்ள முடியாத களம் தமிழீழம்

தமிழகத் தலைவர்கள் எவராலும் புரிந்து கொள்ள முடியாத களம் தமிழீழம்

சரி இருக்கட்டும் திருமா அண்ணே.. இன அழிப்பின் இறுதி நாட்களில் உங்கள் கைத்தொலைபேசியை அணைத்து வைக்குமாறு கூடவா சேரலாதனும்/ பிரபாகரனும் சொன்னார்கள்?

ஏன் பழசைக் கிளறுகிறீர்கள்..?

தமிழ்த் தேசம் சார்ந்து மட்டுமல்ல உலகின் போராடும் இனங்களுக்கு ஒரு முன்மாதிரியாய் உலக அரச பயங்கரவாதத்திடம் அடிபணியாமல் இறுதி வரை போராடி வீழ்ந்த ஒரு போராட்டத்தை உங்கள் இயலாமையை மறைக்க/ சந்தர்ப்ப வாத அரசியலை நியாயப்படுத்த/ பதவிக் கதிரைகளுக்காக கொள்கை சமரசம் செய்யும் அயோக்கியத்தனத்தை மறைக்க இன்னும் எவ்வளவு காலத்திற்குத்தான் ஈழப் போராட்டத்தை 'போஸ்மோட்டம்' செய்யப் போகிறீர்கள்?

உங்களையெல்லாம் நம்பியது நமது தவறு. அதற்கான பலனை அனுபவித்து விட்டோம். இனியும் ஏன் இந்தப் புரட்டு?

தவறு உங்களில் இல்லை.

உங்களால் மட்டுமல்ல, தமிழகத் தலைவர்கள் எவராலும் புரிந்து கொள்ள முடியாத களம் தமிழீழம்.

அதை நாம்தான் சரிசெய்ய வேண்டும் - செய்வோம்.

முடிந்தால் உதவுங்கள். அது உங்கள் விருப்பம்.
அதற்கு முதல் இப்படி உளறிக் கொட்டுவதை நிறுத்துங்கள்..

- பரணி கிருஸ்ணரஜனி -