img/728x90.jpg
நல்லூர் கந்தனின் கோமணமும் - ஈழத்தமிழரின் விளம்பரமும்!

நல்லூர் கந்தனின் கோமணமும் - ஈழத்தமிழரின் விளம்பரமும்!

நல்லூர் முருகன் கோவில் 24ஆவது நாள் தேர் திருவிழா வரையில் சுமார் 128 கோடி வரையில் செலவிடப்பட்டுள்ளதாக புள்ளி விபரங்கள் தெரிவிக்கின்றன. ஆதேபோல் வடகிழக்கில் போர் மற்றும் பல இடறுகளால் பாதிக்கப்பட்ட ஒரு லட்சத்து முப்பத்து ஒன்பதாயிரம் குடும்பங்களைச் சேர்ந்த ஐந்து இலட்சத்து இருபதாயிரம் தமிழ் மக்கள் பாதிக்கப்பட்டு இன்றுவரை சொல்லமுடியாத துயரங்களோடு வாழ்ந்து வருவதாக இன்னொரு புள்ளி விபரம் தெரிவிக்கின்றன.

நல்லூர் கோவில் திருவிழாவையும் பக்தியையும் நான் குறை குறவில்லை மாறக ஈழத் தமிழனின் சுயநலம் மிக்க விளம்பரத்தை தான் விமர்சிக்க விரும்புகின்றேன்.

புலம்பெயர் தேசத்தில் இருந்து நல்லூர் கோவிலுக்கு சென்ற பலர் முருகனை பக்தியோடு வழிபடுவதற்கு பதிலாக விளம்பரத்திற்காக கும்பிட போனவர்களே அதிகம்.

நல்லூர் முருகனை பார்க்க செல்லும் நுழைவாயிலில் கிட்டத்தட்ட 3700க்கும் மேற்பட்டவர்கள் கையேந்தி பிச்சை எடுப்பதாக கூறப்படுகிறது பெரியவர்கள் முதல் பள்ளி செல்லும் சிறுவர்களும் உள்ளடக்கம். இவர்களுக்கு ஒரு 100. ரூபாய் குடுப்பதற்கு நம்மவர்கள் விரும்பவில்லை ஆனால் கோவில் உண்டியலில் 10000 - 25000 ரூபாய் வரையில் போடுகிறார்களாம். 10000 ✖️1000 ✖️ 24 = 24 கோடி (சராசரி ஒரு நாளைக்கு ஒரு கோடி) 128 + 24 = 152 கோடி வருமானத்தை ஈட்டியுள்ளார் நல்லூர் கந்தன் இந்த 24 நாட்களில். கடைசி நாள் திருவிழா அன்று மறுபடியும் முருகன் பழைய கோமணத்தையே காட்டுவாராம். அப்படி என்றால் அந்த பணம் எங்கே போகிறது இதற்கு விடை தெரியாது காரணம் இதற்கு விடை தெரிந்தவர்கள் மூன்றே மூன்று பேர் தான் முருகன், முருகனுக்கு பட்டைய போட்ட ஐயர் இவர்களிடம் இருந்து ஆட்டைய போடும் நல்லூர் கந்தன் பரிபாலன சபை.

இந்த 152 கோடிய இந்த 139000 குடும்பங்களுக்கு வழங்கினால் ஒவ்வொரு குடும்பத்திற்கும் தலா 35000 ரூபாய் விகிதம் வழங்கலாம் ஆனால் இதை ஈழத்தமிழன் செய்ய மாட்டான் காரணம் அவனுக்கு தான் பெயர் கிடைக்காதே.

ஈழத்தமிழன் ஏழைகளுக்கும் குடுக்க மாட்டான், சர முருகன் பணத்தை பயன்படுத்துபவர் என்றாலும் பறவாயில்லை ஆனால் கடவுள் எனும் பெயரில் பெருச்சாளிகளுக்கு கொடுக்கிறோம் அந்த பெருச்சாளிகள் வாங்கி திண்டுட்டு காணமல் ஆக்கப்பட்டவர்களின் குடும்பங்கள் சென்றாலும் ஏழை குடும்பம் சென்றாலும் அனுமதி இல்லை ஆனால் ஆமியின்ர குண்டியையும் சிங்களவன்ர யங்கியையும் கழுவி விடுவார்கள்.

உன் உற்றவனுக்கே குடுக்க வருப்பம் இல்லாத உணக்கு நாடு ஒரு கேடா

ஒன்றை மட்டும் விளங்கிக்கொள் ஈழத்தமிழா வெளிநாட்டில் நீ செல்வச் செழிப்போடு இருக்கின்றாய் என்றால் உணக்காக போராடிய இந்த உறவுகள் தான் காரணம் என்பதை மறவாதே.

- ஈழம் புகழ் மாறன் -