img/728x90.jpg
தம்பி டேய்!

தம்பி டேய்!

ஊரில கள்ள மண் ஏத்துறவன் ஆர்?

எங்கட ஆக்கள் தான் அண்ணை..!

அதுக்கு பின்னால இருக்கிறவன் ஆர்?

அதுகும் எங்கட ஆக்கள் தான் அண்ணை..!

மாவீரர் துயிலும் இல்லத்தை உடைச்சு அதுக்குள்ளை கள்ள மண் ஏத்துறவன் ஆர்?

அந்த நாய்களும் எங்கட ஆக்கள் தான் அண்ணை..!

எங்கட சனத்தை ஏமாத்துற அரசியல்வாதிகள் ஆர்?

எங்கட ஆக்கள் தான் அண்ணை

கஞ்சா கடத்துறவன் ஆர்?

எங்கட ஆக்கள் தான் அண்ணை!

அதுக்கு பின்னால இருக்கிற அரசியல்வாதிகள் ஆர்?

அதுகும் எங்கட ஆக்கள் தான் அண்ணை..!

வாள் வெட்டு குறூப்பாம். அது ஆரடா?

எங்கட பொடியள் தான் அண்ணை..!

அவங்களை பிடிச்சா பிணையில எடுத்து விடுகிறது ஆரடா?

அதுகும் எங்கட ஆக்கள் தான் அண்ணை!

லஞ்சம் வாங்குற பொலிஸ் ஆர்?

எல்லாரும் இல்லை. ஆனாலும் எங்கட தமிழ் பொலிஸ்தான்

அதிகார துஸ்பிரயோகம் செய்யுறவன் ஆர்?

எங்கட ஆக்கள் தான் அண்ணை!

பாலியல் வன்கொடுமை செய்யுறவன் ஆர்?

எங்கட ஆக்கள் தான் அண்ணை

குற்றவாளிகளை காப்பாத்துறவன் ஆர்?

அதுகும் எங்கட ஆக்கள் தான் அண்ணை!

கோடி கோடியாய் சிங்களவனிட்ட வாங்கினது ஆர்?

எங்கட ஆக்கள் தான் அண்ணை!

சிங்கள பேரினவாத ஆட்சிக்கு முட்டுக்குடுக்குறது ஆர்?

எங்கட ஆக்கள் தான் அண்ணை!

சாகும் வரை திரும்ப திரும்ப தேர்தலில் நிக்கிறது ஆர்?

எங்கட ஆக்கள் தான் அண்ணை!

மொத்தத்தில எங்கட சனத்தை ஏமாத்தி எங்கட இனத்தை அழிக்கிறது ஆர்?

சிங்களவனா?
தமிழனா?

எங்கட தமிழன் தான் அண்ணை!

உனக்கு கோபம் வருகுதல்லோ. ஏலாக்கட்டத்தில என்ன செய்வாய் தம்பி?

கையில பிஸ்ரல் இருந்தால் உந்த நாய்களையெல்லாம் நடு றோட்டில விட்டு சுடுவன் அண்ணை!

ஆ.. அதைத்தாண்டா இயக்கம் முந்தி செய்தது. அதுக்கு பேர் மண்டையில போடுறது.