• :
  • :
களத்தில்

அன்புள்ள நெஞ்சங்களே வணக்கம் !

அன்புள்ள நெஞ்சங்களே வணக்கம் !

அன்புள்ள நெஞ்சங்களே வணக்கம் !

உலகின் அனைத்து தேசங்களிலும் வாழும் தமிழீழ உறவுகளின் வாசல் நோக்கி தமிழீழத்தின் உணர்வுகளைக் காற்றில் அனுப்பி வைக்கும் முயற்சி இது. போராட்ட நெருக்கடியிலும் உயிர் தியாகங்களிலும் எம் போராளிகள், கலைஞர்கள்,பொதுமக்களின் அர்ப்ப‌ணிப்பில் உருவாக்கப் பட்ட படைப்புகளையும் மற்றும் எம் மொழியின் எம் போராட்டதின் வரலாறு சுமந்த பதிவுகளினை அழிந்து விடாமல் பாதுகாத்து எமது அடுத்த சந்ததியினரிடம் கையளிப்பது எமது கடமையாகும்.

உலகமயப் பொருளியல் ஆக்கிரமிப்பும், சுரண்டலும் தீவிரப்பட்டுள்ள இன்றைய உலகில், பல்வேறு தேசிய இன மக்களும் தமது அடையாளங்களையும், தாயகங்களையும் மீட்கவும், இருக்கின்ற தாயகத்தை தக்க வைத்துக் கொள்ளவும் போராடுகின்றனர்.

இவ்வகையில், தமது வரலாற்று இருப்பை பதிவு செய்யப் போராடும் இனமாக உலகின் மூத்த இனமாகிய தமிழ் இனம் இன்றைக்கு விளங்குகிறது. தமிழீழ மக்கள், தமிழக மக்கள்,  புலம் பெயர்ந்த தமிழீழ – தமிழக மக்கள் என உலகெங்கும் தமிழ் மக்களும், பிற தேசிய இன மக்களும் நடத்தி வருகின்ற போராட்டங்களையும், மக்களின் பண்பாட்டு நிகழ்வுகளையும் பதிவு செய்யவும், பரப்புரை செய்யவும், மீள் கட்டமைக்கவும் ஊடகங்கள் அவசியம்.

ஆளும் அரசுகளின் அரசியல், பொருளியல், பண்பாட்டுத் திணிப்புகளை எதிர்த்து எழுகின்ற மக்கள் போராட்டங்களின் மீது நம்பிக்கை கொண்டு செயல்படும் மாற்று அரசியல் சிந்தனை இவ் இணையம் தமிழ் இனம், மொழி நலன் காக்கும் செய்திகள், கட்டுரைகள் உள்ளிட்ட படைப்புகளை வெளியிடவும், தங்களது ஆக்கங்களையும், கருத்துகளையும் எமது கீழ்க்கண்ட மின்னஞ்சல் முகவரியைத் தொடர்பு கொண்டு தெரிவிக்கலாம்.

உங்கள் கருத்துக்கள் மற்றும் செய்திகள், ஆய்வுகள் - கட்டுரைகள் ஆவண ஆக்கங்களை

media@kalaththil.com

editor@kalaththil.com

editorial@kalaththil.com

எனும் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பிவைக்குமாறும் அன்புடன் கேட்டுக்கொள்கின்றோம்.

“தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம்”

இயக்குனர்

களத்தில்

தமிழீழம்


அலசல்
அலசல்