• :
  • :
களத்தில்

உலகையே ஆண்ட ராஜராஜ சோழரின் சமாதியின் அவலத்தை பாருங்கள்...!

உலகையே ஆண்ட ராஜராஜ சோழரின் சமாதியின் அவலத்தை பாருங்கள்...!

உலகையே ஆண்ட ராஜராஜ சோழரின் சமாதியின் அவலத்தை பாருங்கள்...!

ராஜராஜ சோழரின் சமாதி தமிழனுக்கு உலக அளவில் அடையாளம் கொடுத்த பேரரசனுக்கு நாம் கொடுக்கும் மரியாதை இது தானா ....?

உலகிலேய மிகபெரிய யானைப் படையை கட்டி ஆண்ட சோழ மன்னன் தென்னிந்தியா முழுவதும், தெற்காசியா வரை வேர் பரப்பி தன் மகன் வெற்றி கொடி நாட்ட வழி வகுத்த மாமன்னன் ராச ராச சோழன்.1000 வருடமாக கம்பீரமாக நிற்கும் பெரியகோவிலை கட்டிய மன்னன், உலகின் முதல் கப்பல் படையை நிறுவிய மன்னன், இன்னும் அடுக்கிகொண்டே போகலாம் இவருடைய புகழை,இப்படிப்பட்ட மாமன்னன் சமாதியை பாருங்கள்.

தமிழனுக்கு உலக அளவில் அடையாளம் கொடுத்த பேரரசனுக்கு நாம் கொடுக்கும் மரியாதை இது தானா ...?

இதுதான் ராஜராஜ சோழரின் சமாதி. நாட்டில் எவன் எவனுக்கோ மணிமண்டபங்களும் சிலைகளும் நினைவு ஆலயங்களும் பரவிக்கிடக்கும் போது உலகை ஆண்ட மாமன்னருக்கு சொல்லிக்கொள்ளும்படியாக மரியாதை செய்யவில்லை நமது தமிழக அரசு.

பாட்டன் பூட்டன். பீட்டன் என்கிறோம் .ஆனால் அவன் நினைவிடம் சீர்ப்படுத்தும் வரலாற்று கடமை எம் முன் நிற்பதை தமிழினமே நீ உணராதிருப்பதேன் ?ஆட்சிக்கட்டில் இருப்பவன் செய்ய வில்லை எனின் உலகம் முழுதும் வாழும் பதின்மூன்று கோடி மக்களும். தலைக்கு ஆயிரம் ரூபாய் போட்டாலும் இவ்வரும் பணியை செய்து முடித்து விடலாம் . தடுக்க இந்தியம் சூழ்ச்சி செய்யலாம் அதை முறியடிக்க சாதி மதம் கடந்து தமிழர் என ஐக்கிய பட வேண்டும் !

உலக நாடுகளுக்கு நாடமைத்த நாம் இன்று நாடின்றி இருப்பதால் தான் பல அவலங்கள் .... இந்தியம் எமை வாழ விடாவிட்டால் தனியகம் தேடுவதில் என்ன தவறு இருக்கின்றது ?

வீரவரலாறு கொண்ட நாம் வீழ்ந்து கிடப்பதில் நியாய மில்லை !வெகுண்டெழு தமிழா வீறு கொண்டெழுந்து செயற்படு ! தமிழகம் பழந்தமிழரின் தொட்டில் அங்கே தடுக்க விழுந்தாலும் கட்டிட இடி பாடுகளிலும் சிற்ப சிதறல்களிலிலுமே விழுவோம் ! அதை தேட இந்தியம் தடை போடுகிறது எனின் தடை உடை தமிழா !