• :
  • :
களத்தில்

எலும்புக்கூடுகள் நகரம்.......

எலும்புக்கூடுகள் நகரம்.......

எலும்புக்கூடுகள் நகரம்.......

அடையாளம் காண்பதற்கு உக்கிப்போன

ஒரு துண்டு துணி இன்னமும் 

அவர்களுடன் ஒட்டிக்கிடக்கிறது,

 

புதை குழிகளிலும் பற்றைகள் அரும்பிய 

இடங்களிலிருந்து வெளியே வந்தவர்களை

அடையாளம் காண்ப தென்பது அவ்வளவு 

கடினமான பணியல்ல.

 

காணாமல் போனோரின் நீளமான 

பட்டியல்கள் கைவசம் உண்டு.

 

கைகளை பின்னே இறுகக் கட்டி உங்கள் 

விழிகளும், மொழிகளும் கெஞ்சிய

வார்த்தைகளை புறந்தள்ளி கதறக் கதற 

உங்களைக் கொன்றனர்.

 

காற்றும், சூரியனும் மெளனமாய்

பார்த்திருந்தன. இவர்கள் துயரத்தில் 

கண்ணீர் துளிர்க்காத அவர்கள் 

தலைகளில் இடிவிழட்டும்.

 

முகங்களை  அடையாளம் 

கண்டோம் கைகளைக் கட்டிய 

அவர்களின் திருவுருவப்படங்களை

பத்திரப் படுத்துக்கொண்டோம்.

 

எங்கள் இதயங்களின் கனல்களை இவை 

அணையாது பார்த்துக் கொள்ளட்டும்.

 

"தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம்"