img/728x90.jpg
img/728x90.jpg
உடன்பாடற்ற பிரெக்சிற்றை நான் வெறுக்கிறேன் – நெதர்லாந்து பிரதமர்

உடன்பாடற்ற பிரெக்சிற்றை நான் வெறுக்கிறேன் – நெதர்லாந்து பிரதமர்

பிரெக்ஸிற், பிரித்தானியாவை குறைபாடுள்ள நாடாக உருவாக்குமென பிபிசி தொலைக்காட்சி சேவைக்கு வழங்கிய பேட்டியில் நெதர்லாந்து பிரதமர் மார்க் ருட்டே எச்சரிகை விடுத்துள்ளார்.

ஐரோப்பிய ஒன்றியத்தின் அங்கத்துவ நாடாக இல்லாத பிரித்தானியா உலக அரங்கில் முக்கிய பாத்திரத்தை வகிக்க போதுமான நாடாக இருக்காது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

பிரித்தானியாவுடன் ஏற்கனவே ஒப்புக்கொள்ளப்பட்ட ஒப்பந்தத்தை ஐரோப்பிய ஒன்றியம் மீண்டும் பரிசீலனைக்கு உட்படுத்தாது எனவும் ருட்டே வலியுறுத்தியுள்ளார்.

ஆனாலும் ஐரிஷ் எல்லை விடயம் எவ்வாறு கையாளப்பட வேண்டுமென பிரித்தானியா ஐரோப்பிய ஒன்றியத்துக்கு தெளிவுபடுத்தினால் அரசியல் பிரகடனத்தில் மாற்றங்களை ஏற்படுத்துவதற்கான வாய்ப்புள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

மேலும் பிரெக்ஸிற்றை தாம் வெறுப்பதாகவும் அதிலும் உடன்பாடற்ற பிரெக்ஸிற்றை தாம் அதிகமாக வெறுப்பதாகவும் கடுமையான பிரெக்ஸிற் நிகழ்வதை எப்படியாவது தவிர்க்க வேண்டுமெனவும் டச்சு பிரதமர் வலியுறுத்தியுள்ளார்.