img/728x90.jpg
பிரான்ஸில் மிதமான நிலநடுக்கம் ஒன்று உணரப்பட்டுள்ளது!

பிரான்ஸில் மிதமான நிலநடுக்கம் ஒன்று உணரப்பட்டுள்ளது!

பிரான்ஸில் மிதமான நிலநடுக்கம் ஒன்று உணரப்பட்டுள்ளது.பிரான்ஸின் லோயர் பள்ளத்தாக்கு அருகே 5.1 அளவில் இந்த நடுக்கம் உணரப்பட்டுள்ளது.

ப்ரெஸுவேர் நகருக்கு அருகே ஏற்பட்ட நிலநடுக்கத்தை ஆயிரக்கணக்கான மக்கள் உணர்ந்துள்ளதாக தெரிவித்துள்ளனர்.

தெற்கில் போர்டியாக்ஸ் துவங்கி வடக்கில் நார்மண்டி வரை உணரப்பட்டதாக தெரியவந்துள்ளது.

இதுவரை எந்த சேதமும் ஏற்படவில்லை என தேசிய சிவில் பாதுகாப்பு சேவையின் செய்தித் தொடர்பாளர் மைக்கேல் பெர்னியர் தெரிவித்துள்ளார்.

பிரான்சின் லு மான்ஸ், நாண்டெஸ், ரென்னெஸ் மற்றும் கெய்ன் உள்ளிட்ட நகரங்களில் நிலநடுக்கத்தின் தாக்கங்கள் உணரப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்படுகின்றது.