img/728x90.jpg
ஒப்பந்தமற்ற பிரெக்சிற்றின் தாக்கம் மிகச் சிறியதாகவே இருக்கும்

ஒப்பந்தமற்ற பிரெக்சிற்றின் தாக்கம் மிகச் சிறியதாகவே இருக்கும்

ஐரோப்பிய ஒன்றியத்தை விட்டு ஒப்பந்தம் எதுவுமின்றி பிரித்தானியா வெளியேறுவதால் பிரித்தானியாவுக்கு ஏற்படும் தாக்கங்கள் மிகவும் சிறியதாகவே இருக்குமென கொன்சர்வேற்றிவ் கட்சியின் தலைமைத்துவப் போட்டியாளர் பொரிஸ் ஜோன்சன் தெரிவித்துள்ளார்.

அத்துடன் பிரெக்ஸிற்றுக்கு பிந்தைய வரவுசெலவுத் திட்டத்தை மிகவும் கவனமான முறையில் வடிவமைத்துள்ளதாகவும் ஜோன்சன் தெரிவித்துள்ளார்.

கொன்சர்வேற்றிவ் தலைமைத்துவப் போட்டியாளர்களின் பிரெக்ஸிற்றுக்கு பிந்தைய நிதி ஒதுக்கீடுகள் மற்றும் செலவினங்கள் தொடர்பான வாக்குறுதிகள் குறித்து நிதியமைச்சர் விடுத்த எச்சரிக்கையைத் தொடர்ந்தே ஜோன்சன் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

பிரித்தானிய வரவு செலவுத் திட்டத்தில் போதுமான மேலதிக நிதி இருப்பதாகவும் அத்துடன் சில விவேகமான வரிக்குறைப்புகளை செய்வதற்கான இடமுள்ளதாகவும் ஜோன்சன் தெரிவித்துள்ளார்.

ஒப்பந்தம் எதுவுமில்லாமல் ஐரோப்பிய ஒன்றியத்தை விட்டு பிரித்தானியா வெளியேறுமென தாம் நினைக்கவில்லை எனக்கூறிய ஜோன்சன் ஆனால் அவ்வாறான ஒரு நிலை ஏற்பட்டால் உடன்பாடற்ற பிரெக்ஸிற்றின் விளைவுகளை குறைப்பதற்கு பல வழிகள் உள்ள காரணத்தால் அதனால் ஏற்படும் தாக்கங்கள் மிகச் சிறியதாகவே இருக்குமெனவும் தெரிவித்துள்ளார்.