img/728x90.jpg
லண்டன் பிரிட்ஜ் தாக்குதலாளிகள் கொல்லப்பட்டமை சட்டபூர்வமானது - தலைமை மரண விசாரணை அதிகாரி

லண்டன் பிரிட்ஜ் தாக்குதலாளிகள் கொல்லப்பட்டமை சட்டபூர்வமானது - தலைமை மரண விசாரணை அதிகாரி

லண்டன் பிரிட்ஜில் தாக்குதல் நடத்திய பயங்கரவாதிகளை பொலிஸார் சுட்டுக்கொன்றமை சட்டபூர்வமானது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

2017 ஆம் ஆண்டு லண்டன் பிரிட்ஜ் பகுதியில் பயங்கரவாதத் தாக்குதல் நடத்தி எட்டு பேரைக் கொன்ற மூன்று பயங்கரவாதிகளை பொலிஸார் சுட்டுக் கொன்றனர்.

குரம் பட் (27) ராசிட் ரெடூனே(30) மற்றும் யூசெப் சக்பா (22) ஆகியோர் போரோ மார்க்கெற் பகுதியில் நின்ற பாதசாரிகள் மீது கண்மூடித்தனமான கத்திக்குத்துத் தாக்குதலை மேற்கொண்டனர்.

தாக்குதல் மேற்கொண்ட 10 நிமிடங்களுக்குள் துப்பாக்கி தாங்கிய பொலிஸ் அதிகாரிகளால் பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர்.

மேலும் பொலிஸாரின் தெளிவான எச்சரிக்கையை பயங்கரவாதிகள் புறக்கணித்திருந்தனர்.

இந்தச் சம்பவம் குறித்த விசாரணையில் பயங்கரவாதிகள் மூன்று பேரும் சட்டபூர்வமாவே கொல்லப்பட்டனர் என்றும் அதுவே பாதுகாப்பான முடிவு என்றும் தலைமை மரண விசாரணை அதிகாரி தெரிவித்துள்ளார்.