img/728x90.jpg
பிரெக்ஸிற்கு பின்னரும் பிரித்தானியர்கள் சுவிஸ் நிறுவனங்களில் பணிக்கு அமர்த்தலாம் என்ற விடயம் உறுதி செய்யப்பட்டுள்ளது!

பிரெக்ஸிற்கு பின்னரும் பிரித்தானியர்கள் சுவிஸ் நிறுவனங்களில் பணிக்கு அமர்த்தலாம் என்ற விடயம் உறுதி செய்யப்பட்டுள்ளது!

பிரெக்ஸிற்கு பின்னரும் சுவிஸ் நிறுவனங்கள் பிரித்தானியர்களை பணிக்கு அமர்த்தலாம் என்ற விடயம் உறுதி செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.

ஒப்பந்தங்களற்ற பிரெக்ஸிற் நிறைவேற்றப்பட்டாலும், பிரித்தானியா மற்றும் சுவிஸ் நாட்டு பணியாளர்கள் மற்றய நாட்டில் பணியாற்றலாம் என்பதை உறுதி செய்யும் வகையில் ஒப்பந்தம் ஒன்றில் கையெழுத்திடுவதற்காக சுவிஸ் நீதித்துறை மற்றும் பொலிஸ் துறை அமைச்சரான Karin Keller-Sutter லண்டனுக்கு சென்றிருந்தார்.

ஏற்கனவே இரு நாடுகளும் பிரெக்ஸிற்கு பின்னர் தத்தம் குடிமக்களின் உரிமைகளை பாதுகாக்கும் வகையில் ஒப்பந்தம் ஒன்றை செய்து கொண்டுள்ளன.

எனினும், குறித்த புதிய ஒப்பந்தம் பிரெக்ஸிற்கு பின்னர் சுவிஸ் பணியாளர்கள் பிரித்தானியாவிலும், பிரித்தானிய பணியாளர்கள் சுவிஸிலம் பணி செய்வதற்கான உறுதியை வழங்குவதாக கூறப்படுகின்றது.

இந்த ஒப்பந்தம், பிரித்தானியா ஐரோப்பிய ஒன்றியத்தை விட்டு ஒப்பந்தங்கள் எதுவுமின்றி வெளியேறினால் மட்டுமே செல்லுபடியாகும் எனவும் குறிப்பிடப்படுகின்றது.