img/728x90.jpg
பிரான்ஸ் புதிய விண்வெளி ராணுவப் பிரிவை செப்டெம்பரில் அமைக்கவுள்ளது!

பிரான்ஸ் புதிய விண்வெளி ராணுவப் பிரிவை செப்டெம்பரில் அமைக்கவுள்ளது!

தேசிய அளவில் புதிய விண்வெளி ராணுவப் பிரிவை அமைக்கப்போவதாக பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவல் மக்ரோன் அறிவித்துள்ளார். பிரான்ஸ் வான் படையின் ஓர் அங்கமாக அந்த பிரிவு செயல்படவுள்ளது.

பிரான்ஸ் தேசியதினக் கொண்டாட்டம் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) இடம்பெற்ற நிலையில், அதில் கலந்து கொண்டு ஜனாதிபதி மக்ரோன் இந்தத் தகவல்களை வெளியிட்டார்.

தேசியப் பாதுகாப்பு நலனில் அக்கறை செலுத்தும் விதமாக விண்வெளி ராணுவப் பிரிவு எதிர்வரும் செப்ரெம்பரில் அமைக்கப்படும் என்று அவர் குறிப்பிட்டார். இந்தநிலையில், அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் ஏற்கனவே அத்தகைய திட்டத்தை ஆரம்பித்துள்ளார்.

இதனிடையே, சீனாவும், ரஷ்யாவும் விண்வெளி தொடர்பான கவனத்தையும், அதற்கான ஒதுக்கீடுகளையும் அண்மையில் அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.