img/728x90.jpg
ஒப்பந்தமற்ற பிரெக்ஸிற்றை எதிர்த்து போராடுவதற்கு நிதியமைச்சர் பிலிப் ஹம்மண்ட்  உறுதி!

ஒப்பந்தமற்ற பிரெக்ஸிற்றை எதிர்த்து போராடுவதற்கு நிதியமைச்சர் பிலிப் ஹம்மண்ட் உறுதி!

ஐரோப்பிய ஒன்றியத்தை விட்டு ஒப்பந்தம் எதுவுமின்றி பிரித்தானியா வெளியேறுவதை எதிர்த்து அரசாங்கத்துக்கு வெளியிலிருந்து போராடுவதற்கு நிதியமைச்சர் பிலிப் ஹம்மண்ட் உறுதியளித்துள்ளார்.

அடுத்த வாரம் புதிய பிரதமர் பதவியேற்கும் போது நிதியமைச்சர் பதவியிலிருந்து விலகவுள்ளதாகவும் ஆனால் அரசாங்கத்துக்கு வெளியிலிருந்து ஒப்பந்தமற்ற பிரெக்ஸிற்றுக்கு எதிராக போராடுவேன் எனவும் ஹம்மண்ட் தெரிவித்துள்ளார்.

பிரதமர் பதவி போட்டியாளர்களான பொரிஸ் ஜோன்சன் மற்றும் ஜெரமி ஹண்ட் ஆகியோரின் பணியை கடினமாக்க விரும்பவில்லை எனவும் ஆனால் ஒப்பந்தமற்ற பிரெக்ஸிற்றுக்கான எந்தவொரு முயற்சியையும் தடுப்பதற்காக அவர் செயற்படுவது உறுதியெனவும் ஹம்மண்ட் தெரிவித்துள்ளார்.

பாராளுமன்ற உறுப்பினர்கள் ஒப்பந்தமற்ற பிரெக்ஸிற்றுக்கு எதிராக இந்த வருட ஆரம்பத்தில் வாக்களித்துள்ள போதிலும் தேவைப்படும் பட்சத்தில் ஒப்பந்தமற்ற பிரெக்ஸிற்றுக்கு தயாராக உள்ளதாக இரு போட்டியாளர்களும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.