img/728x90.jpg
இங்கிலாந்தில் இன்று முதல் தொடர்ந்து வரும் மூன்று நாட்களுக்கு மிகக் கடுமையான வெப்பநிலை நிலவும்!

இங்கிலாந்தில் இன்று முதல் தொடர்ந்து வரும் மூன்று நாட்களுக்கு மிகக் கடுமையான வெப்பநிலை நிலவும்!

இங்கிலாந்தில் இன்று முதல் தொடர்ந்து வரும் மூன்று நாட்களுக்கு மிகக் கடுமையான வெப்பநிலை நிலவும் என்று வானிலை அவதான நிலையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

வெப்பஅலை காரணமாகவே இங்கிலாந்தில் இதுவரையில் இல்லாத அளவுக்கு கடுமையான வெப்பநிலை ஏற்பட்டுள்ளதாக வானியலாளர்கள் தெரிவித்துள்ளனர்.

லண்டன் மற்றும் தென்கிழக்கு இங்கிலாந்துப் பிராந்தியங்களில் வெப்பநிலை மிக உயர்வாக இருக்கும் என்று எதிர்வு கூறப்பட்டுள்ளது.

இப்பிராந்தியங்களில் இன்று வெப்பநிலை 34°C ஆகவும் நாளை புதன்கிழமை 33°C ஆகவும் வியாழக்கிழமை 38°C ஆகவும் இருக்கும் என்று வானிலை அவதான நிலையம் அறிவித்துள்ளது.

வியாழக்கிழமை எதிர்பார்க்கப்படும் வெப்பநிலை இங்கிலாந்தில் இதுவரை பதிவான 36.7°C என்ற ஜூலை மாத வெப்பநிலையை முறியடிக்கும் என்று கூறப்பட்டுள்ளது.

2015 ஆம் ஆண்டு ஜூலை மாதம் ஹீத்ரோ பகுதியில் 36.7°C என்ற வெப்பநிலையே ஜூலை மாத உயர்ந்த வெப்பநிலையாகப் பதிவாகியிருந்தது. ஆனால் வியாழக்கிழமை வெப்பநிலை அதனைவிட உயர்வாக இருக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது.

மேலும் 2003 ஓகஸ்ற் மாதம் கென்ட் கவுண்டியின் ஃபேவர்ஷாமில் பதிவான 38.5°C என்ற வெப்பநிலையை மிக உயர்வான பதிவாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இதேவேளை ஆபத்துக்களைத் தவிர்ப்பதற்காக சிறுவர்கள், பாடசாலை மாணவர்கள் எவரையும் நீர்நிலைகளுக்குள் இறங்கவேண்டாம் என்று அறிவுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது.