img/728x90.jpg
img/728x90.jpg
அடுத்த பிரதமர் யார் என்பதை ஜோ ஸ்வின்சன் தீர்மானிக்க முடியாது - ஜெரமி கோர்பின்

அடுத்த பிரதமர் யார் என்பதை ஜோ ஸ்வின்சன் தீர்மானிக்க முடியாது - ஜெரமி கோர்பின்

நம்பிக்கையில்லாப் பிரேரணை மூலம் பொரிஸ் ஜோன்சனை வெளியேற்றவும் ஒப்பந்தமற்ற பிரெக்ஸிற்றை நிறுத்துவதற்குமான தனது திட்டத்தை ஜோ ஸ்வின்சன் நிராகரித்ததால் தான் ஏமாற்றமடைந்தேன் என்று ஜெரமி கோர்பின் தெரிவித்துள்ளார்.

ஒப்பந்தமற்ற பிரெக்ஸிற்றை நிறுத்துவதற்கான தனது திட்டத்திற்கு லிபரல் ஜனநாயகக் கட்சி ஆதரவளிக்கும் என்று நம்புவதாகத் தெரிவித்த ஜெரமி கோர்பின் அடுத்த பிரதமர் யார் என்பதை ஜோ ஸ்வின்சன் தீர்மானிக்க முடியாது என்று கூறியுள்ளார்.

ஒப்பந்தமற்ற பிரெக்ஸிற் ஏற்படாமல் தடுப்பதற்காக தான் இடைக்காலப் பிரதமராக வரவேண்டும் என்ற ஜெரமி கோர்பினின் கருத்தை லிபரல் ஜனநாயகக் கட்சித் தலைவர் திருமதி ஜோ ஸ்வின்சன் நிராகரித்துள்ளார்.

இருப்பினும் வரவிருக்கும் நாட்களில் கோர்பினுடன் பேச்சுவார்த்தை நடத்தத் தயாராக இருப்பதாக திருமதி ஜோ ஸ்வின்சன் தெரிவித்துள்ளார்.

விரைவில் பொதுத்தேர்தலில் பங்கேற்கும் தொழிற்கட்சி, ஐரோப்பிய ஒன்றியத்தை விட்டு வெளியேறுவதற்கான விதிமுறைகள் குறித்த வாக்கெடுப்புக்கு உறுதிமொழி வழங்கும் என்றும் கோர்பின் தெரிவித்துள்ளார்.