img/728x90.jpg
img/728x90.jpg
ஒக்ரோபர் 31ஆம் திகதி பிரித்தானியாவில் ஐரோப்பிய ஒன்றியப் பிரஜைகளின் சுதந்திர நடமாட்டம் முடிவுக்குவரும்

ஒக்ரோபர் 31ஆம் திகதி பிரித்தானியாவில் ஐரோப்பிய ஒன்றியப் பிரஜைகளின் சுதந்திர நடமாட்டம் முடிவுக்குவரும்

ஒக்ரோபர் 31ஆம் திகதி ஒப்பந்தமற்ற பிரெக்ஸிற் ஏற்பட்டால், பிரித்தானியாவில் ஐரோப்பிய ஒன்றியப் பிரஜைகளின் சுதந்திர நடமாட்டம் முடிவுக்குவரும் என்று அரசாங்கம் அறிவித்துள்ளது.

இதன்மூலம் பிரித்தானியாவில் வாழவும் வேலை செய்யவும் அனுமதி வழங்கப்படாது என்று கூறப்படுகின்றது.

தெரசா மே அரசாங்கம் ஐரோப்பிய ஒன்றியப் பிரஜைகளின் சுதந்திரமான நடமாட்டத்தை 2021 வரை நீடிப்பது அல்லது ஐரோப்பிய ஒன்றியப் பிரஜைகள் நீண்ட காலம் வசிப்பதற்கு விண்ணப்பிப்பதற்காக மூன்று மாதங்கள் பிரித்தானியாவில் தங்க அனுமதிப்பது குறித்து பரிசீலனை செய்திருந்தது.

இருப்பினும் அந்த இரண்டு திட்டங்களும் இப்போது கைவிடப்பட்டுள்ளன. ஒரு புதிய அணுகுமுறை பிரித்தானியாவுக்கும் ஐரோப்பிய ஒன்றியத்துக்குமிடையில் ஏற்பட்டால் இதுகுறித்து பின்னர் பரிசீலிக்கப்படும்.

பிரித்தானியாவில் சுமார் 3 மில்லியன் ஐரோப்பிய ஒன்றிய குடிமக்கள் வாழ்கின்றனர். பிரித்தானியா ஐரோப்பிய ஒன்றியத்துடன் அங்கம் வகித்ததால் ஐரோப்பிய ஒன்றியப் பிரஜைகள் இங்கு வாழவும் வேலை செய்யவும் அனுமதி வழங்கப்பட்டிருந்தது.

இந்த விவகாரம் குறித்து பிரதமர் பொரிஸ் ஜோன்சனிடம் கேட்டபோது; பிரித்தானியா குடியேறியவர்களுக்கு விரோதமான போக்கைக் கொண்டிருக்காது என்றும் வருங்காலங்களில் குடியேற்றம் ஜனநாயக ரீதியாகக் கட்டுப்படுத்தப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.

இதுதொடர்பாக பிரதமர் அலுவலக செய்தித்தொடர்பாளர் தெரிவிக்கையில்; அவுஸ்திரேலியாவில் கடைப்பிடிக்கப்படும் புள்ளிகள் அடிப்படையிலான விதிகள் நடைமுறைப்படுத்தப்படும் என்றும் இங்கு வருபவர்களுக்கு கடுமையான குற்றவியல் விதிகள் அறிமுகப்படுத்தப்படும் என்றும் அவர் கூறினார்.