img/728x90.jpg
img/728x90.jpg
பிரித்தானிய பிரதமர் பொரிஸ் ஜோன்சனிற்கும்- அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பிற்கும் இடையில் முக்கிய சந்திப்பு!

பிரித்தானிய பிரதமர் பொரிஸ் ஜோன்சனிற்கும்- அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பிற்கும் இடையில் முக்கிய சந்திப்பு!

பிரித்தானிய பிரதமர் பொரிஸ் ஜோன்சனிற்கும், அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பிற்கும் இடையில் முக்கிய சந்திப்பொன்று இடம்பெறவுள்ளது.

இன்று(ஞாயிற்றுக்கிழமை) இந்த சந்திப்பு இடம்பெறவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

பிரான்ஸின் பையாரிட்ஸ் நகரில் நேற்று(சனிக்கிழமை) ஆரம்பமாகியுள்ள ஜி7 மாநாடு எதிர்வரும் 26ஆம் திகதி வரை நடைபெறவுள்ளது.

உலகில் நிலவிவரும் சமத்துவமின்மை, சமூக நலன் குறித்து இந்த மாநாட்டின் போது விவாதிக்கப்பட்டு வருகின்றது.

இந்த மாநாட்டில், அமெரிக்கா, கனடா, இத்தாலி, பிரித்தானியா, ஜேர்மனி, ஜப்பான் மற்றும் பிரான்ஸ் நாடுகளின் அரச தலைவர்கள் கலந்து கொண்டுள்ளனர்.

இந்தநிலையிலேயே குறித்த மாநாட்டின் இடைநடுவில் பொரிஸ் ஜோன்சனிற்கும், டொனால்ட் ட்ரம்பிற்கும் இடையில் முக்கிய சந்திப்பொன்று இடம்பெறவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதன்போது பல முக்கிய விடயங்கள் குறித்து பேசப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.